abi navya - deepak kumar marriage
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘கயல்’. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் அபி நவ்யா. இவருக்கும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை’ தொடர் நாயகன் தீபக்கிற்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
abi navya - deepak kumar marriage
தீபக் டிக்டாக்கில் பிரபலமான முகம். டிக்டாக் மூலமாகத்தான் அவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் தான் இவருடைய முதல் சீரியல்.
abi navya - deepak kumar marriage
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’விலும் இவர் நடிக்கிறார். இதுதவிர, அபி நவ்யா ஜெ தொலைக்காட்சியில் நியூஸ் ஆங்கராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
abi navya - deepak kumar marriage
முன்னதாக நடைபெற்ற இவர்களுடைய திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சென்னை மாங்காட்டில் நேற்று அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.
abi navya - deepak kumar marriage
இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.
abi navya - deepak kumar marriage
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அபி நவ்யா மற்றும் தீபக் நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் நிச்சயதார்த்தம் இருந்தது.
abi navya - deepak kumar marriage
திருமணக் கொண்டாட்டம் தொடங்கி யுள்ளது குறித்த வீடியோக்களை எல்லாம் அபி நவ்யா மற்றும் தீபக் தங்களுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
abi navya - deepak kumar marriage
அபிநவ்யா சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.