பிரபல சீரியல் நடிகர் பாரத் கல்யாண் மனைவி பிரியதர்ஷினி (43), இன்று உடல்நல பிரச்சனையால் உயிரிழந்துள்ள நிலையில், இவரது மரணத்திற்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் பாரத் கல்யாண். மேலும் தமிழ் மொழியில் சில படங்களில் நடித்துள்ள இவர், பல்வேறு சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக தற்போது ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா, கண்ணான கண்ணே, ஜமீலாவின் அப்பா போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய தந்தை கல்யாண் குமார் பழம்பெரும் நடிகர் ஆவார்.
26
இந்நிலையில், நடிகர் பாரத் கல்யாண் மனைவி... பிரியதர்ஷினி திடீர் என இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் இறந்ததற்கான கரணம் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பிரியதர்ஷினி போலியோ டயட் மேற்கொண்டதால் தான் அவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை எடுத்து வந்த போது உடல்நல குறைவு ஏற்பட்டு, கோமோ நிலைக்கு சென்றுள்ளார். சுமார் 3 மாதம் கோமாவில் இருந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போலியோ டயட் என்பது, உடல் எடையை குறைப்பதற்காக கற்கால உணவுகளை உட்கொண்டு மேற்கொள்ளும் டயட் ,முறையாகும். குறிப்பாக மூன்று வேலையும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இதில் முட்டை, காய்கறிகள், இறைச்சி, நட்ஸ் போன்ற நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.
56
பால், காபி, பிஸ்கட், மது, சர்க்கரை, சில கிழங்கு வகைகள், போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். ஆனால் டயட் முறை ஒவ்வொருவர் உடலுக்கு ஏற்றாப்போல் மாறுபடுவதால், மருத்துவர்களின் ஆலோசனை படியே இதனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
பார்த் கல்யாணின் மனைவியின் மரணம் தற்போது சீரியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், குடும்பத்திரனையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.