சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்.. பாபி சிம்ஹா படத்தின் மூலம் திரையுலகிற்குள் வருகிறார்!

Published : Jun 24, 2022, 07:57 PM IST

தான் தற்போது சினிமா பிரவேசம் செய்துள்ளார். அதோடு   தற்போது தன் தந்தை நடிக்கும் படத்திலேயே அவர் அறிமுகமாகிறார்.மேலும் இரண்டாவது மகன் ஹேமசந்திர பாபு திரைப்பட இயக்குநராக இருக்கிறார்.

PREV
14
 சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்.. பாபி சிம்ஹா படத்தின் மூலம் திரையுலகிற்குள் வருகிறார்!
ThadaiUdai

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மகிழ்வித்தவர். குறிப்பாக கவுண்டமணியுடனான அவரது காம்போ கோலிவுட் வரலாற்றில் இன்றும் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும்.

24
ThadaiUdai

செந்திலின் மகன் மணிகண்ட பிரபு பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திலும் அப்பா மகனாக செந்தில் மற்றும் மணிகண்ட பிரபு நடிக்கிறார்கள் என்பது ஹைலைட்.

34
ThadaiUdai

தடை உடை' படத்தை ரேஷ்மி சிம்ஹா தயாரித்து, என்.எஸ்.ராகேஷ் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, மிஷா நரங், ரோகினி, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் முடியும் தருவாயில் உள்ளது.

44
actor senthil

நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவரான மணிகண்டபிரபு ஒரு பல் மருத்துவர் ஆவார். இவர் தான் தற்போது சினிமா பிரவேசம் செய்துள்ளார். அதோடு   தற்போது தன் தந்தை நடிக்கும் படத்திலேயே அவர் அறிமுகமாகிறார்.மேலும் இரண்டாவது மகன் ஹேமசந்திர பாபு திரைப்பட இயக்குநராக இருக்கிறார்.

click me!

Recommended Stories