சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடித்த போது, காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் - ஸ்ரீஜா ஜோடி. இவர்கள் இருவரும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஒன்றாக இணைந்து நடித்து வந்த நிலையில், இருவரின் கெமிஸ்ட்ரியும் தாறுமாறாக இருந்த நிலையில் ரசிகர்கள் பலர்.. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறினால் மிகவும் நன்றாக இருக்கும் என தெரிவித்து வந்தநிலையில், பின்னர் உண்மையிலேயே இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர்.