நடிகை சோனியா அகர்வாலுடனான விவாகரத்திற்கு பிறகுசெல்வராகவன் இயக்கிய “மயக்கம் என்ன” படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.
2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு 20 ஜனவரி 2012 அன்று பிறந்த மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர் 7 அக்டோபர் 2013 இல் பிறந்தனர்.
இதனிடையே 3வது முறையாக கீதாஞ்சலி கர்ப்பமானார். Pregnancy belly உடன் கலக்கலான மார்டன் உடையில் விதவிதமான போட்டோ ஷூட்களையும் நடத்தியிருந்தார். அவை அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.
புதிதாக ஒரு குடும்ப உறுப்பினரை காத்திருந்தவர்களுக்கு பரிசாக கடந்த ஜனவரி 7ம் தேதி அழகி ஆண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே குழந்தைக்கு பெயரை முடிவு செய்திருந்த செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதி, 3வது குழந்தை பிறந்திருப்பதையும், ரிஷிகேஷ் செல்வராகவன் என பெயர் வைத்திருப்பதையும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்தது. அதேபோல் ரிஷிகேஷ் செல்வராகவன் போட்டோவை வெளியிடும் படி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
ரசிகர்களின் கோரிக்கை படி, இரண்டு மாதமே ஆன குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது கீதாஞ்சலி மற்றும் செல்வராகவன் இருவரும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கீதாஞ்சலி தன்னுடைய செல்ல மகனை கையில் தூக்கி வைத்திருப்பது போல், வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.