இரியடித்தை காட்டி ரூ.26 கோடி மோசடி செய்த இசையமைப்பாளர்... கம்பி எண்ணும் பிரபல நடிகையின் மகன்..!

Published : Mar 17, 2021, 01:17 PM IST

அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி தொழிலதிபரிடம் 26.20 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான, அம்ரீஷை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  

PREV
16
இரியடித்தை காட்டி ரூ.26 கோடி மோசடி செய்த இசையமைப்பாளர்... கம்பி எண்ணும் பிரபல நடிகையின் மகன்..!

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ். இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' உள்ளிட்ட ஒரு சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் தன்னுடைய அம்மா ஜெயசித்ரா இயக்கிய 'நானே என்னுள் இல்லை' என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அவருக்கு நடிப்பு பெரிதாக கைகொடுக்கவில்லை. எனவே தற்போது இசையமைப்பாளராக தன்னுடைய பணியை தொடர்ந்து வருகிறார்.
 
26

இந்நிலையில் அம்பரீஷுக்கு வளசரவாக்கத்தில் சேர்ந்த நெடுமாறன் என்பவருடன் கடந்த 2013 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெடுமாறன், படப்பிடிப்புகள் நடத்த ஷூட்டிங் ஹவுஸ் மற்றும் வீடுகள் வாங்கி வாடகைக்கு விடுவதை தொழிலாக செய்து வந்துள்ளார். 
 
36

அம்ரீஷ் நெடுமாறனிடம், தன்னிடமும் தனது நண்பர்களிடமும் அரிய வகை இரிடியம் உள்ளதாகவும், அதனை மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனம்  2.50 லட்சம் கோடிக்கு வாங்க தயாராக உள்ளதாக கூறி ஆசை காட்டி உள்ளனர். 

46

மேலும் தங்களிடம் இருப்பது அரிய வகை இரிடியம் தான் என்பதை  கன்னட ஆய்வகம் ஒன்று உறுதி செய்துள்ளதாகவும், அதற்கான   சான்றிதழையும் நெடுமாறன் காட்டியுள்ளனர்.  இதனால் இவர்களை நம்பி நெடுமாறன் 26.20 கோடி ரூபாய் கொடுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.  பின்னர் மலேசியாவிற்கு அவரை அழைத்துச் சென்று,  நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து 2.50 கோடி லட்சத்திற்கு இரிடியத்தை வாங்குவது போல் நாடகமாடி ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

56

இதன் பின்னர், அம்ரீஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் 26.20 கோடி ரூபாய் கொடுத்துள்ளார் நெடுமாறன். ஆனால்அவர்கள் சொன்னது போல மலேசிய நிறுவனத்திடமிருந்து எந்த பணம் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நெடுமாறன் நடிகையின் மகனை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
 
66

இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அம்ரீஷ் மற்றும் அவரது நண்பர்களை 26 கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக கைது செய்துள்ளனர்.  மேலும் இவரது கூட்டாளிகள் சிலரை தேடி வருகின்றனர். இரிடியம் மோசடியில் பிரபல நடிகையின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!

Recommended Stories