குண்டாய் கொழுக், மொழுக்குன்னு மாறிய 'சூரரை போற்று' அபர்ணா..! சேலையில் சிறகடித்த புகைப்படங்கள்..!

First Published | Mar 17, 2021, 11:01 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு, ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'சூரரை போற்று' படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி, சும்மா குண்டாக கொழு கொழுவென மாறி சேலையில் விதவிதமாக எடுத்து கொண்ட போட்டோஸ்... 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் அபர்ணா பாலமுரளி.
இவரது குடும்பமே இசை குடும்பம், இவரது தந்தை, பாலமுரளி ஒரு இசையமைப்பாளர், தாயார் ஷோபனா பின்னணி பாடகி.

அவர்களின் வழியில் இவரும் பல படங்களில் பாடியுள்ளார்.
அபர்ணா பாலமுரளி சிறந்த டான்ஸர்.
பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சி புடி போன்ற கலைகளில் கை தேந்தவர்
தமிழில் இவர் நாயகியாக அறிமுகமானது, 'தீதும் நன்றும்' என்கிற படம் என்றாலும், இவர் நடிப்பில் முதலில் வெளியானது '8 தோட்டாக்கள்' படம் தான்.
பின்னர், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சர்வம் தாளமயம், 'சூரரை போற்று' போன்ற படங்கள் இவரது திறமைக்கு தீனி போட்டது.
குறிப்பாக சூரரை போற்று படத்திற்கு பின், அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதால், ஏற்றி விட்ட ஏணியை கூட மறந்து, தன்னுடைய முதல் பட புரோமோஷன் பணிகளில் கூட இவர் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.
மேலும் கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பது இவரது பிளஸ்.
இவரது கை வசம் தற்போது எந்த படங்களும் இல்லை என்றாலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சூரரை போற்று படத்தில் அழகு பதுமையாக வந்த அபர்ணா, தற்போது கொழுக்கு மொழுக்குன்னு மாறியுள்ளார்.
அதிலும் சேலையில் சிறகடிக்கும் பட்டம் பூச்சி போல் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Latest Videos

click me!