
செல்வராகவன் தனது பேட்டி ஒன்றில் நான் மிகவும் மோசமான காலகட்டத்தில் இருந்து விலகி உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்துள்ளேன் என்று மனம் வலியோடு பேசிய வீடியோவை வைத்து அவர் விவாகரத்து பற்றி தான் பேசுகிறார் என்ற யூகம் எழுந்துள்ளது. அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம். செல்வராகவன் தமிழ் சினிமா துறையில் பல படங்களை இயக்கியுள்ளார். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார்.
இதன் மூலமாக தனது திறமையை தமிழ் திரையுறுகளுக்கு எடுத்துக்காட்டியுள்ளார். தனது தம்பியான தனுஷை வைத்து இதில் பாதி படங்கள் இயக்கியுள்ளார். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் தான் செல்வராகவன். வழக்கமான கதைக்களம் இல்லாமல் புதிய படிப்பை உருவாக்கியவர். காதல் அறிவியல், அரசியல் போன்ற கதைக்களம் கொண்ட படத்தினை இவர் உருவாக்கியுள்ளார்.
தான் இயக்கிய புதுப்பேட்டை படத்தின் மூலம் சோனியா அகர்வாலை காதலித்து இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு குடும்பப் பிரச்சினையின் காரணமாக இருவரும் 2009ல் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு செல்வராகவன் தனிமையிலிருந்து வந்தார். அதன் பிறகு தான் கீதாஞ்சலியை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
மயக்கம் என்ன படத்தின் படப்பிடிப்பில் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்திருந்தவர் கீதாஞ்சலி. அவரை பிடித்து போக, அவர் மீது காதல் கொண்டு இருவரும் காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டனர். செல்வராகவனுக்கு கீதாஞ்சலி இரண்டாவது மனைவி. இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தது. ஒரு பெண் இரண்டு மகன்கள். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்கிடையே ஏதோ பிரிவு ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் செல்வராகவனின் புகைப்படங்களை கீதாஞ்சலி நீக்கியது தான். இதே போன்று செல்வராகவனும் கீதாஞ்சலியின் புகைப்படங்களை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கீதாஞ்சலி தனது கணவரான செல்வராகவனின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். தற்போதைய சினிமா வட்டாரத்தில் காதல் பிரிவு என்றால் போட்டோக்களை நீக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது கீதாஞ்சலியும் தனது கணவரான செல்வராகவனின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனை பார்த்த நெடிசன்கள் ஒருவேளை இருக்குமோ என்று கவுண்டமணி பாணியில் "ச்சே ச்சே" என்று பதிவிட்டு மீம் போட்டு வருகின்றனர்.
செல்வராகவன் பேட்டி ஒன்றில் தனது மன வலியுடன் சில வார்த்தைகளை கூறியுள்ளார். நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து விலகி வந்து உட்கார்ந்து இருக்கிறேன் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து இருக்கிறேன் என்று கூறலாம் என்று மன வலியுடன், மழை உலைச்சலால் பேசியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று நான் இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், எப்படியும் இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தார். அவர் கூறியதற்கும் இப்போது கீதாஞ்சலி தனது கணவரின் புகைப்படங்களையும் நீக்கியதையும் வைத்து பார்க்கையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இதை வைத்து பார்க்கையில் மனைவி கீதாஞ்சலி போட்டோக்களை நீக்குவது விவாகரத்தை குறிக்கிறது போல் தெரிகிறது என்று நிட்டிசன்கள் கூறுகிறார்கள். ஆனால் கீதாஞ்சலி தனது instagram பெயரை கீதாஞ்சலி செல்வராகவன் என்று தான் வைத்திருக்கிறார். அதனால், விவாகரத்து இருக்கா இல்லையா என்ற குழப்பம் நெடிஷன்கள் இடையே ஏற்பட்டு வருகிறது.