
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் மட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நாயகனான தளபதி விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' (Jana Nayagan), வரும் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க விஜய்யின் அரசியல் பயணத்திற்கான படிக்கட்டாக இருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி, மோனிஷா பிளெசி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக எதிரி நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் விஜய்யின் தீவிர ரசிகை என்று தனது தமிழ்நாட்டுத் தோழியிடம் கூறிய வீடியோ தான் இப்போது சோஷியால் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. என்ன தான் தமிழ் தெரியாத போதிலும் டப்பிங்கில் படம் பார்த்து தளபதி விஜய் மீது பைத்தியமாக இருக்கிறார். அவரது சமீபத்திய எல்லா படங்களையும் அவர் பார்த்து மகிழ்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
விஜய்க்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் மட்டுமின்றி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் தான் விஜய்யின் தீவிர ரசிகர் என்று தனது தமிழ்நாட்டுத் தோழியிடம் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
• அந்த வீடியோவில் பேசிய ரசிகை, தனக்கு தளபதி விஜய் மிகவும் பிடிக்கும். பீஸ்ட், மாஸ்டர், லியோ ஆகிய படங்கள் மட்டுமின்றி அந்த படங்களின் பின்னணி இசை ரொம்பவே மிகவும் பிடிக்கும். இந்த படங்களைத்தான் சமீபத்தில் பார்த்ததாக தனது பிளே ஹிஸ்டரியை காண்பித்துள்ளார்.
விஜய்யின் நடிப்பில் வந்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற 'தி கோட் (The G.O.A.T)' படம் தான் தனக்கு பிடித்த படம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தளபதி என்று சொன்னவுடன் அவரது முக பாவணையே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் விதமாக பூரிப்புடன் இருக்கிறார். இந்த வீடியோவைக் கண்ட விஜய் ரசிகர்கள் தற்போது அதனை இணையத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜன நாயகன் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான தளபதி கச்சேரி வெளியாகி வைரலான நிலையில் 2ஆவது பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிக்கின்றனர்.
இதே போன்று ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் நிலையில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் ஓரிரு வாரத்தில் 2ஆவது சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா அதன் பின்னர் 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 9ஆம் தேதி படம் வெளியாகும்.
இதுவரையில் தமிழ் சினிமாவில் எந்த நேரடி படமும் ரூ.1000 கோடி வசூல் கண்டிராத சூழலில் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெறும் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது தவெக தொண்டர்களாக மாறிய நிலையில் ஜன நாயகன் எப்படியும் ரூ.1000 கோடிக்கு அதிகமாகவே வசூல் குவித்து கோலிவுட் சினிமாவில் 1000 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.