Pandian Stores 2 Serial 662 Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 662ஆவது எபிசோடில் தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறித்து பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் மற்றும் தங்கமயில் இடையிலான குடும்ப பிரச்சனை தலைதூக்கியிருக்கிறது. குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தங்கமயில் பற்றிய எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. ஆனால் அந்த நகை மேட்டர் மட்டும் இன்னும் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து மயிலின் அப்பா, அம்மாவும் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் வாக்குவாதம் நடந்தது. பாண்டியனைத்தவிர அனைவரும் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
25
Saravanan and Thangamayil Break Ups
கடைசியாக பாண்டியன் பேசினார். உண்மையை சொல்லியிருந்தால் பிடித்திருந்தால் திருமணம் இல்லையென்றால் அப்படியே விட்டுவிட்டிருப்போம். அப்படியே தோஷமாக இருந்தாலும் அதற்குரிய பரிகாரங்களை செய்த பிறகு திருமணம் செய்திருப்போம். 12ஆம் வகுப்பு வரை படிச்சது, 2 வயது பெரியவள் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. ஆனால், நீங்கள் உண்மையை மறைத்து அடுக்கடுககாக பொய்களை சொன்னது தான் எங்களுக்கு பிரச்சனை என்று கூறினார்.
35
Thangamayil Thrown Out From Pandian Family
நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு சரவணன் தாலி கட்டுனான். இப்போது என்னுடைய வாழ்க்க இப்படியாகிவிட்டது என்று கேட்டால் என்ன செய்ய முடியும். இனிமேல் அவனுடைய வாழ்க்கையை எப்படி சரி செய்து கொடுக்க முடியும். வயது மற்றும் படிப்புக்கு மட்டுமே இவ்வளவு பிரச்சனை என்றால் இனி நகை மேட்டர் மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான்.
குழந்தை விஷயத்தில் வேறு பொய் சொல்லியிருக்குறீங்க. எல்லோரும் எங்க குடும்பத்தை ஏமாற்றிவிட்டீங்க. உங்களது மகள் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. எங்களிடம் சொல்லியிருக்கலாம் அல்லது கட்டுன புருஷன்கிட்ட சொல்லியிருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் மறைத்து இந்த உண்மையை கட்டுபிடித்தவன் மீதே வீண் பழி சுமத்தியிருக்கீங்க.
45
Pandian Stores 2 Serial 662 Episode Highlights
இவ்வளவு தூரம் நடந்ததுக்கு பிறகும் இன்னும் நல்லாவே நடிக்கிறாங்க அப்பா அவர்களை நம்பி விடாதீர்கள். 3 பொய் மட்டும் தான் சொல்லியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். இன்னும் எத்தனை பொய் சொல்லியிருப்பாளோ தெரியவில்லை என்று சரவணன் கூறவே கடைசியாக பாண்டியன் இனிமேல் உங்களது மகள் தங்கமயில் இங்க இருக்க வேண்டாம் என்றார். உங்களுடன் கூட்டிக் கொண்டு சென்றுவிடுங்கள். இனிமேலும் அவர் இங்க இருக்க வேண்டாம் என்றார்.
55
Thangamayil Thrown Out Manickam Bakiyam in Pandian Stores 2 Serial 662 Episode Highlights
மேலும், என்னுடைய மகன் வாழ்க்கைக்கு என்ன கதி என்று கேட்பதற்கு முன்னதாக நீங்கள் கிளம்பிவிடுங்கள். நியாயப்படி போலீஸ் ஸ்டேஷனில் நிற்க வைத்திருக்க வேண்டும். கழுத்தை பிடித்து வெளில் அனுப்புவதற்கு முன்னதாக நீங்களே கிளம்பிவிட்டால் நல்லது. உன்னை மன்னிப்பதாக இருந்தால் நான் இந்த நேரம் வீட்டை விட்டு வெளியேறியிப்பேன் என்று சரவணன் பேசினார்.
கடைசியாக எல்லோரது காலிலும் விழாத குறையாக ராஜீ, மீனா, கதிர், செந்தில் என்று எல்லோரிடமும் கெஞ்சினார். ஒன்றும் கதையாகவில்லை. கடைசியில் தங்கமயில், மாணிக்கம் மற்றும் பாக்கியம் மூவரும் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்தின் கடைசி எபிசோடு முடிந்ததது. இனி அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.