விஜய்சேதுபதிக்கு எதிராக செயல்பட்டாரா சீனு ராமசாமி? மிரட்டல் குறித்து பரபரப்பு பேட்டி..!

இன்று காலை இயக்குனர் சீனு ராமசாமி  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்" என பதிவிட்ட பதிவு, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

அதே நேரத்தில், மிரட்டல் விடுக்க காரணம் என்ன? யார்? என்பது குறித்து சீனு ராமசாமி தெரிவிக்கவில்லை.
எனவே இவரது நலம் விரும்பிகள் முதல், ரசிகர்கள் வரை தொடர்ந்து சமூக வலைதளத்தில் இவரிடம் என்ன ஆனது என கேள்வி எழுப்பி வந்த நிலையில், சீனு ராமசாமி இதற்கான விளக்கத்தை பேட்டி மூலம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீனு ராமசாமி, ‘விஜய் சேதுபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என ஒரு சிலர் சித்தரித்து உள்ளனர் என்றும் நள்ளிரவிலும் எனது செல்போனுக்கு மிரட்டல் அழைப்புகள் மற்றும் ஆபாசமாக அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் விஜய் சேதுபதி நலன் கருதியே ’800’ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்திதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் சீனுராமசாமி விளக்கமளித்துள்ளார்.
சீனுராமசாமியின் இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!