கணவர் கூறிய வார்த்தையை அனிதாவிடம் சொன்ன பிக்பாஸ்..! கதறி கதறி அழுத சம்பவம்..!

First Published | Oct 28, 2020, 1:31 PM IST

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன், நவராத்திரி பூஜை மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில், சுரேஷ் சக்கரவர்த்தி சுமங்கலிகள் வந்து விளக்கு ஏற்றுங்கள் என கூறினார். இதை வைத்து கொண்டு கணவன் மார்களை இழந்தவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என, சுரேஷை சொன்ன வார்த்தையை வைத்து தன் மனதில் தோன்றியவற்றை பேசினார் அனிதா.
 

அதே நேரத்தில், இந்த தருணத்தில் இது பேசவேண்டிய வார்த்தை இல்லை என்பதை சுரேஷ் கூறி தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.
அனிதா மன்னிப்பு கேட்க சென்றபோது தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என கூறி அந்த இடத்தில் இருந்து விட்டால் போதும் என ஓடிவிட்டார்.
Tap to resize

இவரது செயல் அனிதாவை மிகவும் பாதித்தது. பலரும் அனிதாவிற்கு சப்போர்ட் செய்யாமல் சுரேஷ் தரப்பிற்கு ஆதரவு கொடுப்பது போல் அவர் உணர்ந்ததால், பாத்ரூமில் குலுங்கி குலுங்கி நேற்று அழுதார்.
அதே நேரத்தில் போட்டியாளர்கள் சுரேஷிடம் இது குறித்து கேட்டதற்கு தனக்கு அவரிடம் பேச பயமாக உள்ளது என தன்னுடைய கருத்தை சுருக்கமாக கூறி இந்த பிரச்னையை முடித்தார்.
பின்னர் பிக்பாஸ் அறைக்கு சென்ற அனிதா, அதிகம் தனிமையில் இருப்பது போல் தோன்றுகிறது. நான் எப்போதுமே மிகவும் ஜாலியாக இருக்கும் ஒரு நபர் இல்லை என்றும், பிரச்சனை வந்தால் கூட தன் பக்கம் யாரும் நின்று பேசாதது போல் தோன்றுகிறது. பிடிச்சவங்க சொல்றத எடுத்துக்குறதா? அல்லது நாம நினைப்பதை எடுத்துக்குறதா என்று மனதிற்குள் ஒரு போராட்டம். மேலும் ஒரு நெகடிவ் பீல் மனதில் இருந்து கொண்டே உள்ளது என சோகமான முகத்துடன் கூறினார்.
பின்னர் பிக்பாஸ் இது உங்களை சோதிக்கும் விளையாட்டு தைரியமாக நீங்கள் விளையாடுங்கள் என ஆறுதல் கூறுகிறார்.
பின்னர் உங்களுடைய கணவரிடம் நாங்கள் பேசி கொண்டு தான் இருக்கிறோம், அவரும் கண்ணு குட்டியை கேட்டதாக சொன்னார் என கூறியதும், முதலில் சிரித்த அனிதா... தன்னுடைய கணவரை நினைத்து தேம்பி தேம்பி அழுத காட்சி பார்ப்பவர்கள் மனதையே உருக வைக்கும் விதமாக இருந்தது.
பின்னர் தன்னுடைய கணவருக்கு காதலை வெளிப்படுத்தி, பிக்பாஸ் அறையை விட்டு வெளியே சென்றார்.
அதே நேரத்தில் பலர் அனிதாவிற்காக பேசியும், தனக்காக யாருமே பேசவில்லை என மீண்டும் மீண்டும் அவர் கூறி வருவது, ரியோ, ஆரி உள்ளிட்ட பலருக்கு இன்னும் கடுப்பை தான் கிளப்பியது.

Latest Videos

click me!