இந்தப் படத்தில், நாயகனாக நடித்திருந்த ஆர்யா, எந்த அளவிற்கு படத்திற்காக தன்னை வருத்தி கொண்டு நடித்துள்ளார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. அதே போல் துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், அனுபமா குமார், ஜான் கோகென், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றுள்ளார். குறிப்பாக அனைவருமே அந்த படங்களின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று சொல்லும் அளவிற்கு அசத்தியிருந்தனர்.