நடிகர் சரத்குமாரை காதலித்த தமிழ் நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சரத்குமார். அண்மையில் பிரதீப் உடன் இவர் நடித்த டியூட் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்திற்கு பின்னர் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் சரத்குமார். அப்படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது.
25
மூத்த இயக்குனர் கருத்து
சரத்குமார் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொண்டார். 90களில் அவர் நடிகை நக்மாவுடன் காதலில் இருந்தார். அதுவே சரத்குமாரின் திருமண உறவு முறிவுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக மூத்த இயக்குனர் நந்தம் ஹரிச்சந்திர ராவ் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
35
நக்மாவுடன் சரத்குமார் காதல்
சரத்குமாருக்கு 1984ல் சாயா என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு வரலட்சுமி உட்பட இரு மகள்கள் உள்ளனர். நக்மாவுடனான காதலால் சரத்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனை மனைவி சாயா எச்சரித்தும் சரத்குமார், நக்மாவை பிரியாததால், சாயா விவாகரத்து பெற்றார்.
2000ல் சரத்குமார் - சாயா விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு, இவர்கள் பிரிவுக்கு நக்மா தான் காரணம் என பரவலாக பேசப்பட்டதால், நக்மாவும் சரத்குமாரை விட்டு பிரிந்தார். பின்னர், சரத்குமார் நடிகை ராதிகாவுடன் சில படங்களில் நடித்தார். ராதிகாவும் அப்போது விவாகரத்து பெற்றிருந்தார்.
55
ராதிகாவுடன் திருமணம்
ஒரு படத்தில் ராதிகா சரத்குமாருக்கு உதவ, இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த நெருக்கம் காதலாக மாறியது. 2001ல் ராதிகாவும், சரத்குமாரும் திருமணம் செய்து கொண்டனர். காதலை முறித்துக் கொண்டு சரத்குமார் திருமணம் செய்துகொண்டாலும், 50 வயதை கடந்தும் நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கிறார்.