அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ

Published : Dec 17, 2025, 01:24 PM IST

இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்தின் படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், அதைப்பார்க்க தியேட்டருக்கு வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார். அவரை பவுன்சர்கள் மீட்டனர்.

PREV
14
Anirudh Stuck in Crowd

தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். அவர் கைவசம் தற்போது விஜய்யின் ஜனநாயகன், அஜித்தின் ஏகே 64, ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, கமல்ஹாசனின் இந்தியன் 3 என உச்ச நடிகர்களின் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதுதவிர பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் கிங், யஷின் பான் இந்தியா படமான டாக்ஸிக் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது ஜனநாயகன் படத்தின் பின்னணி இசைப் பணிகளில் பிசியாக இருக்கிறார் அனிருத். இந்த நிலையில், அவர் படையப்பா படம் பார்க்க சென்றபோது தியேட்டரில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

24
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனிருத்

நடிகர் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான படையப்பா அண்மையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினியின் தீவிர ரசிகரான அனிருத், படையப்பா படத்தை பார்க்க தியேட்டருக்கு விசிட் அடித்திருந்தார். அப்போது ரசிகர்களுடன் வைப் செய்தபடி படத்தை பார்த்து ரசித்த அனிருத், படம் முடிந்து வெளியே வந்தபோது தான் கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார். ரசிகர்கள் இடையே சிக்கிக் கொண்ட அனிருத், ஒரு இரும்பு வேலி அருகே நின்றுகொண்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்க, அப்போது அவரை மீட்க பவுன்சர்கள் அங்கு வந்தனர்.

34
அலேக்கா தூக்கிய பவுன்சர்ஸ்

பின்னர் அனிருத்தை அங்கிருந்து அலேக்காக தூக்கி அவரை பத்திரமாக கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுக்கு கமெண்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. படம் பார்க்க வந்தது குத்தமாடா என்னடா அனிருத்துக்கு வந்த சோதனை இது என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொரு நபர் போட்டுள்ள கமெண்டில், அனிருத்தை துண்டு மாதிரி தோளில் போட்டுச் செல்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

44
படையப்பாவை காண படையெடுக்கும் பிரபலங்கள்

படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகளுக்கு பின் மறு வெளியீடு செய்யப்பட்டு உள்ளதால், அப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அனிருத் மட்டுமின்றி சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்பராஜ் போன்ற பிரபலங்களும் அப்படத்தை தியேட்டரில் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories