Saranya Ponvannan Daughter Engagement Photos : நடிகை சரண்யா பொன் வண்ணனின் 2ஆவது மகளான சாந்தினிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் மட்டுமின்றி சிறந்த நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை சரண்யா பொன் வண்ணன். கமல் ஹாசன் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் ஏற்று நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். பல விருதுகளையும் வென்றுள்ளார். சினிமாவில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்று கூறியிருக்கிறார்.
24
Saranya Ponvannan Daughter Engagement
தனுஷ், சூர்யா, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஜீவா, விமல், ஆகியோருக்கு அம்மாவாக நடித்துள்ளார். சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்த போதே நடிகரும், இயக்குநருமான பொன் வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்று 2 மகள்கள். இருவரும் டாக்டர்கள். அதுவும் பிரியதர்ஷினி குழந்தைகள் நல மருத்துவர்.
34
Chandini Engagement Photos
இதே போன்று சாந்தினி மகப்பேறு மருத்துவர். மகள்கள் பிறந்த பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தான் சரண்யாவின் 2 ஆவது மகளான சாந்தினிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள், மேக்கப் காட்சிகள் என்று எல்லாமே சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது. ஆம், சாந்தினி மற்றும் டான் பிலிப் திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஆனால், எப்போது திருமணம் என்று தான் தகவல் வெளியாகவில்லை.
44
Ponvannan Daughter Engagement
சென்னையை மையமாகக் கொண்ட சினிமா குடும்பம் என்றாலும், மாப்பிள்ளை நீலகிரியைச் சேர்ந்தவர் என்பதால், இயற்கையின் எழில் கொஞ்சும் ஊட்டியில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சினிமாப் பின்னணி இருந்தும், மகள் ஒரு மருத்துவர்; அவருக்கேற்றார் போல், மாப்பிள்ளையும் ஒரு மருத்துவர் என்பது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.