Thalapathy 67 :பீஸ்ட் தோல்வியால் இறங்கி அடிக்க தயாரான விஜய்... ‘கே.ஜி.எஃப் 2’ பிரபலத்துடன் கூட்டணி அமைக்கிறார்

First Published | Apr 28, 2022, 1:05 PM IST

Thalapathy 67 : தளபதி 66 படமே இன்னும் முடியாத நிலையில், தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜுன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் தளபதி 67 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்தை முடித்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.


தளபதி 66 படமே இன்னும் முடியாத நிலையில், தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அண்மையில் இப்படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டது என்றும், அதனையே தற்போது விஜய்க்காக லேசான மாற்றங்கள் செய்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.
 

இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கே.ஜி.எஃப் 2 படத்தில் அதீரா என்கிற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சஞ்சய் தத்தை விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தில் பலமான வில்லன் இல்லாதது அப்படத்துக்கு பெரும் பின்னடைவாக கூறப்பட்டது. அதனால் இத்தகையை முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Kaathuvaakula Rendu Kaadhal Review : ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - முழு விமர்சனம்

Latest Videos

click me!