Published : Apr 28, 2022, 12:30 PM ISTUpdated : Apr 28, 2022, 12:32 PM IST
Happy Birthday Samantha Ruth Prabhu : சமந்தாவின் பிறந்த நாளான இன்று நியூ போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமா உலகில் மின்னிய சமந்தா கடந்த 2010ஆம் ஆண்டு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
28
Samantha
இதைத்தொடர்ந்து அதர்வாவின் பாணாகாத்தாடி படத்தில் நாயகியாக நடித்த சமந்தா நான் ஈ மூலம் முன்னணி நாயகிகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
38
Samantha
இதைத்தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் நாயகியாக நடித்துள்ளார் சமந்தா.
48
Samantha
பின்னர் ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சமந்தா என்று தான் இந்தியா நாயகியாக உயர்ந்துள்ளார்.
58
Samantha
மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றி வந்த சமந்தா சமீபகாலமாக கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஓ..சொல்றியா மாமா பாட்டில் அவர் போட்ட கவர்ச்சி குத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
68
Samantha
இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி விரைவில் வெளியாக உள்ள சகுந்தலாவில் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
78
samantha
கணவரை பிரிந்த பிறகு முழுநேர கவர்ச்சியில் குதித்துள்ள சமந்தா சமீபத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்துள்ளார். அந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
88
samantha
இந்நிலையில் நியூ ஹேர் ஸ்டைலில் சமந்தா சமீபத்தில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத வகையில் உள்ளார் சமந்தா.