மீரா மிதுனுக்கு அதிரடியாக செக் வைத்த சனம் ஷெட்டி... 15 நாட்கள் மட்டுமே கெடு விதிப்பு....!

First Published | Aug 13, 2020, 12:58 PM IST

இதனால் ஆத்திரமடைந்த மீரா மிதுன், சனம் ஷெட்டியைப் பற்றியும் ஆபாசமாக விமர்சித்தார். இந்நிலையில் சனம் ஷெட்டி தனது வழக்கறிஞர் மூலம் மீரா மிதுனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்ததும், அதே போல் கமல், திரிஷா போன்றோர் ஜாதி ரீதியில் தான் தற்போது வரை, தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளனர் என்றும் தரக்குறைவாக விமர்சித்தார்.
நடிகர் சூர்யா பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும், ஒரு சாதாரணக் காட்சிக்கு கூட 20 டேக்குகள் வாங்குவார் என்றும், ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தனர்.
Tap to resize

இதைத்தொடர்ந்து சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து போன் மற்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டுவதாகவும், கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் உங்க மனைவி, குழந்தைகளுக்கு இப்படி நடந்தால் ஏற்பீர்களா... என் நெம்பர் பல குரூப்களுக்கு பகிரப்படுகிறது. எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யா தான் பொறுப்பு என்று ட்விட்டரில் கொந்தளித்தார் .
இந்நிலையில் மீராவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சனம் ஷெட்டி, மிகவும் ஆதங்கத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “விஜய்யின் தந்தை இயக்குனர் என்பதால் அறிமுகம் மிகவும் எளிதாக கிடைத்திருந்தாலும், இவரெல்லாம் ஒரு நடிகரா என, பல விமர்சனங்கள் வந்தது. அதையெல்லாம் கடந்து அவர் தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் தான் நடிகர் என்பதை நிரூபித்து, பல லட்ச ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். எனவே இப்படி எல்லாம் பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்"
இப்படி பேசுவதால் ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்கும், பிரபலம் ஆகலாம் என நீங்கள் நினைத்தால்.. ஒருவேளை நடக்கலாம்.. நீங்கள் எதிர்பார்த்தது உங்களுக்கு கிடைத்து விட்டது. இதோட நிப்பாட்டுங்க போதும். நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் கலவரம் உண்டாக்கி, அதனால் பிரபலம் ஆவேன் என நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக அது அப்படி போகாது.. வேற மாதிரி தான் போய் முடியும். கேர்புல்லாக இருங்க மீரா. உங்க ட்விட்டர் கணக்கை பார்த்து கொள்ளுங்கள். எல்லோரும் ரிப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள். விரைவில் deactivate ஆக போகிறது பார்த்துக்கொள்ளுங்கள்" என சனம் ஷெட்டி கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மீரா மிதுன், சனம் ஷெட்டியைப் பற்றியும் ஆபாசமாக விமர்சித்தார்.
இந்நிலையில் சனம் ஷெட்டி தனது வழக்கறிஞர் மூலம் மீரா மிதுனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னைப் பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்த வீடியோவை 15 நாட்களுக்குள் வெளியிடாவிட்டால் மன நஷ்ட வழக்கு தொடர்வேன் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest Videos

click me!