அடேங்கப்பா... நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டும் இதனை கோடியா?

First Published | Aug 13, 2020, 11:30 AM IST

அடேங்கப்பா... நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டும் இதனை கோடியா?
 

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும், நயன்தாரா ஐயா படத்தில் நடிக்க துவங்கும் போது, லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.
ஆனால் தற்போது ஒரு படத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
Tap to resize

இவர் நடிக்கும் படங்கள் தனி ஹீரோவிற்கு சமமாக, வசூலில் கல்லா கட்டி வருவதால், தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் இவருடன் ஜோடி போட ஏங்குகிறார்கள்.
அந்த வகையில் பார்த்தல், நயன்தாரா ரஜினிகாந்த்,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார்.
இதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும், தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது இவரின் கை வசம் ரஜினியின் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்கள் உள்ளன.
சரி இந்த அளவிற்கு பிரபலமான, நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பார்ப்போம் வாங்க...
நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் மட்டும் 4 முதல் 5 கோடி.
அவ்வப்போது சில விளம்பர படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். இதற்காக அவர் சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த பி.எம். டபல்யூ மற்றும் ஆடி Q7 கார்களின் விலை மட்டுமே 10 கோடி.
இவருக்கு சொந்தமாக கேரளாவில் ஒரு வீடும், ஃபாம் ஹவுஸ் ஆகியவை உள்ளது.
அதே போல் சென்னையிலும் இவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன.
இதை தவிர, சில மண்ணில் தன்னுடைய பணத்தை இன்வெர்ஸ் செய்துள்ளார்.
மொத்தமாக இவருடைய சொத்து மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!