பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு மகனுடன் கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா..!

First Published | Nov 30, 2020, 3:26 PM IST

நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறமால் எவிக்ஷன் ஃப்ரீ டாஸ்க்கை அனிதா வென்றதன் மூலம், தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.
 

இந்நிலையில் நேற்றைய தினம் ஜித்தன் ரமேஷ் அல்லது நிஷா ஆகியோரில் இருந்து ஒருவர் தான் வெளியேறுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணமாக சம்யுக்தா வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு, வழக்கம் போல் இவரை கண்ணீருடன் சக போட்டியாளர்கள் இவரை வழியனுப்பி வைத்தனர்.
Tap to resize

வெளியே வந்து கமலஹாசனிடம் பேசிய சம்யுக்தா ஆஜித்துடன் ஒரு நல்ல பந்தம் இருந்தது என்றும், ரம்யா, ஷிவானி, அர்ச்சனா, உள்ளிட்ட சில போட்டியாளர்களை மிஸ் செய்வதாக கூறினார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் தான் ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக அனுபவித்ததாகவும் இங்கு எனக்கு புதிய உறவுகள் கிடைத்தது என்றும் இது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா அவரது மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி அவரை வரவேற்றுள்ளனர்.
கிட்ட தட்ட 8 வாரங்களுக்கு பின், தன்னுடைய செல்ல மகன் ரயனை சம்யுக்தா கொஞ்சி மகிழ்ந்தார்.
சம்யுக்தா குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!