அழகு மகள் அகீராவுடன் கார்த்திகை தீபம் கொண்டாடிய நடிகர் நகுல்... விளக்கு ஒளியில் ஜொலிக்கும் போட்டோஸ்...!

First Published | Nov 30, 2020, 2:38 PM IST

தனது செல்ல மகளுடன் கார்த்திகை தீபம் கொண்டாடிய நடிகர் நகுலின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

“பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார்.
அதன் பின்னர் இவர் நடித்த “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார்.
Tap to resize

சரியான ஹிட் கிடைக்காததால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த நகுல், எரியும் கண்ணாடி என்ற படம் மூலம் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார். அதுமட்டுமின்றி அப்பாவாகவும் புரோமோஷன் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நகுலும், அவருடைய காதல் மனைவியான ஸ்ருதியும் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
கர்ப்பம், வளைகாப்பு, இயற்கை முறையில் தண்ணீர் தொட்டியில் பிரசவம் என தங்களுடைய குழந்தை குறித்த மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர்
தற்போது கைக்குழந்தையான மகள் அகீராவுடன் கார்த்திகை தீபம் கொண்டாடிய புகைப்படங்களை நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
விளக்கு ஒளியில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அழகாக புன்னகைக்கும் இந்த க்யூட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
குட்டி பாப்பாவுடன் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ள நகுலிடம், “சுத்திப் போடுங்க கண்ணுப் படப்போகுது” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Nakkhul

Latest Videos

click me!