இவங்க தான் சமுத்திரக்கனி மனைவியா..? அழகு மகன் மற்றும் மகளோடு எடுத்து கொண்ட கியூட் போட்டோ..!

First Published | Dec 5, 2020, 10:58 AM IST

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர், தேசிய விருது பெற்ற நடிகர் என பல்வேறு திறமைகளோடு அறியப்படும் சமுத்திரக்கனியின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா..? வாங்க பார்க்கலாம்.
 

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிக்கனியை ருசித்தவர்.
இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி, 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைத்தேன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கே, சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு கிடைத்தது.
Tap to resize

இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான, 'நாடோடிகள்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
அரசி, இதோ பூபாலன் போன்ற சில சீரியல்களை இயக்கி உள்ளது மட்டும் இன்றி, ஜன்னல், மர்மதேசம் , 7 சி போன்ற சீரியல்களில் நடித்தும் உள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான அப்பா, சாட்டை போன்ற படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது கிடைத்தது.
இப்படி பல்வேறு, பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் இவரது அன்பு குடும்பம் இதோ...

Latest Videos

click me!