ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம்... விக்ரமுக்கு போட்டியாக ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பாலிவுட் படம்

Published : Jun 11, 2022, 10:35 AM IST

samrat prithviraj : சாம்ராட் பிரித்விராஜ் படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் ரூ.100 கோடியை எட்டுவதே சந்தேகம் தான் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

PREV
14
ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம்... விக்ரமுக்கு போட்டியாக ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பாலிவுட் படம்

பாலிவுட்டில் சமீப காலமாக வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலானவை ஃபிளாப் ஆகி வருகின்றன. கடந்த மாதம் கங்கனா நடிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரான தக்கட் என்கிற திரைப்படம் வெளியாகி 10 கோடி கூட வசூலிக்க முடியாமல் போனதோடு, அதன் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

24

தற்போது அதே நிலை தான் சாம்ராட் பிரித்விராஜ் படத்துக்கும் வந்துள்ளது. அக்‌ஷய் குமார் நடிப்பில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் சாம்ராட் பிரித்விராஜ். இப்படத்தில் ஹீரோயினாக முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் நடித்திருந்தார். அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இதுவாகும். 

34

மன்னர் சாம்ராட் பிரித்விராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தை சந்திர பிரகாஷ் திரிவேதி இயக்கி இருந்தார். கடந்த ஜூன் 3-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் தோல்வியை சந்தித்துள்ளது.

44

இப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் ரூ.100 கோடியை எட்டுவதே சந்தேகம் தான் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் இப்படத்துக்கு போட்டியாக ரிலீசான கமலின் விக்ரம் படம் அனைத்து மொழிகளிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் முதல் வாரத்தில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது. விக்ரம் படத்துடன் மோதியதால் சாம்ராட் பிரித்விராஜ் திரைப்படம் கடும் இழப்பை சந்தித்தது தான் மிச்சம்.

இதையும் படியுங்கள்... Nayanthara : திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விக்கி - நயன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்... இது ரொம்ப காஸ்ட்லி ஆச்சே

Read more Photos on
click me!

Recommended Stories