Nayanthara : திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விக்கி - நயன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்... இது ரொம்ப காஸ்ட்லி ஆச்சே

First Published | Jun 11, 2022, 9:36 AM IST

Nayanthara : திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன் - விக்கி ஜோடி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் காதல் திருமணம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் வெளியான அவர்களது திருமண புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணத்தன்று, தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தான் இதனை ஏற்பாடு செய்து இருந்தனர். புதுமணத் தம்பதியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

Tap to resize

இதுதவிர திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய விருந்து பரிமாறப்பட்டது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் அசைவ பிரியர்களாக இருந்தாலும், அவர்களது திருமணத்தில் சுத்த சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன. திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றதால் அவர்கள் அசைவ உணவை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன் - விக்கி ஜோடி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. பொதுவாக திருமணத்திற்கு வருவபவர்களுக்கு தேங்காய் பலம் மற்றும் ஸ்வீட் கொடுக்கப்படும். ஆனால் இந்த ஜோடியோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை விருந்தினர்களுக்கு கிஃப்ட்டாக கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்.... The Legend movie : எல்லா தியேட்டர்லையும் நம்ம படம் ஓடனும்...! ஆர்டர் போட்ட அண்ணாச்சி... ஆடிப்போன கோலிவுட்

Latest Videos

click me!