இதில் அக்ஷய் குமார் பிருத்விராஜ் சௌஹானாக நடிக்கிறார், அதே சமயம் மனுஷி சில்லர் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் , சோனு சூட் மற்றும்மானவ் விஜ் , அசுதோஷ் ராணா மற்றும் சாக்ஷி தன்வார் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் 9 செப்டம்பர் 2019 அன்று யாஷ் ராஜ் பிலிம்ஸால் வெளியிடப்பட்டது.