கோவில் கட்டி நடிகை சமந்தாவை கடவுளாக வழிபடும் ரசிகர்; எங்கு தெரியுமா?

நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் மீது உள்ள அதீத பாசத்தால், அவருக்காக கோவில் கட்டி அவரை கடவுளாக வழிபட்டு வருகிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Samantha Fan Made Temple : சினிமா நடிகர்களையும், நடிகைகளையும் கடவுளாக வழிபடும் மக்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். உதாரணத்திற்கு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அவர்களுக்காக தியேட்டர் முன் பிரம்மாண்ட கட் அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் நடிகை மீதுள்ள பாசத்தால் ரசிகர் ஒருவர் கோவில் கட்டி அவரை கடவுளாக வழிபட்டு வருகிறார். இந்த பாக்கியம் கிடைத்த நடிகை வேறுயாருமில்லை சமந்தா தான்.

சமந்தாவுக்கு கோவில்

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உள்ள கிரேஸ் இன்னும் குறைந்தபாடில்லை. அப்படி அவர் மீது உயிரையே வைத்திருக்கு ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த கோவில் ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊரில் தன் வீட்டின் அருகேயே சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கடந்த 2023-ம் ஆண்டு கட்டினார்.

இதையும் படியுங்கள்... சமந்தாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா? வைர மோதிரத்தின் பின்னணி என்ன?


சமந்தாவை கடவுளாக வழிபடும் ரசிகர்

இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் குஷ்பு, ஹன்சிகா, நமீதா போன்ற நடிகைகளுக்கு கோவில் கட்டப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் இணைந்திருக்கிறார். இந்த கோவில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி கடந்த 2023-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த ரசிகரின் இந்த செயலை சிலர் வியந்து பாராட்டினாலும், இதுபோன்ற பத்தியக்கார ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்களா என்று சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

சமந்தா மூவி லைன் அப்

நடிகை சமந்தாவின் கெரியரை பொறுத்தவரை அவர் அண்மையில் டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி. அதன் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். மேலும் அந்த படங்களில் சமந்தாவே நடித்தும் வருகிறார். அந்த வகையில் சுபம் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது பங்காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் சமந்தா நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... சமந்தா போனில் 'லவ்' என்ற பெயரில் உள்ள நம்பர்! யாருடையது தெரியுமா?

Latest Videos

click me!