சிக்கந்தர் காட்சிகள் ரத்து
சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் ஈத் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 அன்று திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும், இந்த முறை சல்மானுக்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. சிக்கந்தர் திரைப்படத்தின் பல காட்சிகள் குறைந்த பார்வையாளர்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்பட விமர்சகர் ஆமோத் மெஹ்ரா, சிக்கந்தர் திரைப்படத்தின் சில காட்சிகள் பார்வையாளர்கள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். ரசிகர்கள் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறுகின்றனர். மும்பையில் உள்ள சில மல்டிபிளக்ஸ்களில் சிக்கந்தர் திரைப்படத்தின் இரவு காட்சிக்கு பதிலாக தி டிப்ளமேட் மற்றும் எல்2 எம்புரான் போன்ற திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சூரத், அகமதாபாத், இந்தூர் மற்றும் போபால் திரையரங்குகளில் சிக்கந்தர் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் குறைவாக விற்பனையானதால் அப்படம் தியேட்டரில் இருந்தே தூக்கப்பட்டு உள்ளது.