மாஜி கணவரை வெருப்பேற்றும் சமந்தா.. நாக சைதன்யா தம்பிக்கு ‘ஹக்’..!

Kanmani P   | Asianet News
Published : Apr 09, 2022, 05:18 PM IST

நடிகை சமந்தா, திடீரென நாக சைதன்யாவின் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

PREV
18
மாஜி கணவரை வெருப்பேற்றும் சமந்தா.. நாக சைதன்யா தம்பிக்கு ‘ஹக்’..!
samantha

ஹாலிவுட், டோலிவுட் என கொடிகட்டி பறந்து வரும் சமந்தாவும் - தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் திருமணம்  செய்துகொண்டனர்.

28
samantha

காதல் திருமணமாக இருந்தாலும் இருவீட்டாரும் இணைந்து செய்து வைத்தனர். திருவிழா போல பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

38
samantha

4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் மிக அழகிய நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். அவ்வப்போது ஹாலிடேஸ் கொண்டாடத்திற்கு செல்லும் இவர்களின் புகைப்படங்கள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தன.

48
samantha

திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக இருந்த இந்த ஜோடி விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அதற்காக சமந்தா படங்களில் கமிட் ஆகாமல் தவிர்ப்பதாகவும் தகவல் பரவின.

58
samantha

இவ்வாறு செய்திகள் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கையில்  கடந்தாண்டு திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த செய்து இருவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

68
samantha

விவாகரத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை சமந்தா கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, சகுந்தலம், இந்தியில் தயாராகும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்

78
samantha

அதேபோல நாகசைதன்யாவும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதற்கிடையே சமீபத்திய பேட்டி ஒன்று சமந்தா தான் தனக்கு சரியான ஜோடி என நாகா சைதன்யா குறி கொஞ்சம் டவுட்டை ஏற்படுத்தினார். இதனால் இருவரும் இணைய  வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது.

88
samantha

இதற்கு பதில் கூறும் விதமாக திருமண புடவையை திருப்பி கொடுத்த சமந்தா, நாகசைதன்யாவை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை கூட நிறுத்தி விட்டார். இந்நிலையில் நாகசைதன்யாவின் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார் சமந்தா.

click me!

Recommended Stories