Samantha: விவாகரத்துக்கு பின் முன்னாள் மாமனாரை சந்தித்தாரா சமந்தா? திடீர் ஸ்டுடியோவுக்கு விசிட்.. என்ன காரணம்!

Published : Nov 28, 2021, 05:13 PM IST

நேற்று முன் தினம், அதாவது வெள்ளிக்கிழமை அன்று (நவம்பர் 26) நடிகை சமந்தா, விவாகரத்துக்கு பின்னர்  ஐதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் தந்தை, நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  

PREV
18
Samantha: விவாகரத்துக்கு பின் முன்னாள் மாமனாரை சந்தித்தாரா சமந்தா? திடீர் ஸ்டுடியோவுக்கு விசிட்.. என்ன காரணம்!

கடந்த மாதம், நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் பிரிவதாக அறிவித்தனர். அதற்கு என்ன காரணம், என்று பல யூகங்கள் தோன்றினாலும் தற்போது வரை இருவரும் உண்மை காரணத்தை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.

 

28

விவாகரத்துக்கு பின்னர் நாகர்ஜுனா எப்போதும் சமந்தாவிற்கு என் குடும்பம் உறுதுணையாக இருக்கும் என்றும், இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியவில்லை என்பது போல் தெரிவித்திருந்தார்.

 

38

இந்நிலையில் விவாகரத்தை அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், வெள்ளிக்கிழமை அன்று சமந்தா தனது முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவின் ஸ்டுடியோவிற்கு சென்றதை ஆச்சர்யமாக பார்த்து வருகிறார்கள்.

 

48

மேலும் அவர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்குச் சென்றது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தவுடன், அது வைரலானது மற்றும் அவரது வருகைக்கான காரணம் என்ன என்று ரசிகர்களை கேள்வி எழுப்ப துவங்கினர்.

 

58

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, குணசேகரின் சாகுந்தலம் படத்தில் சமந்தா டைட்டில் ரோலில் நடிக்கும் அவரது பாத்திரத்திற்காக அவர் ஸ்டுடியோவில் வந்தார் என்று கூறப்படுகிறது.

 

68

அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவரும் சமந்தா... சமீபத்தில் பிலிப் ஜான் இயக்கத்தில் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்' படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பாதிக்க உள்ளதை அறிவித்தார்.

 

78

மேலும் நடிகை டாப்ஸி தயாரிப்பில் பாலிவுட் திரைப்படத்தில் சமந்தா அறிமுகமாக உள்ள தகவலும் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்தது.

 

88

விரைவில் சமந்தா முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories