தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன், நாளுக்கு நாள் அழகில் மெருகேறி வருவதுடன், மாடர்ன் லூக்கிற்கு மாறிவருகிறார்.
இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்திலும் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.
பின்னர் தமிழ் திரையுலகிலும் நுழைந்த பிரியங்கா மோகன், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, 100 கோடி கிளைப்பில் இணைந்த திரைப்படமான 'டாக்டர்' படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டான்' படத்திலும் ஹீரோயினாக மாறியுள்ளார்.
மேலும் நடிகர் சூர்யாவை வைத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும்... 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அளவான கவர்ச்சியால் ரசிகர்களை வசீகரித்து வரும்... பிரியங்கா மோகன், விதவிதமான மாடர்ன் லுக்கில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்திய இவரது புகைப்படங்கள் தற்போது... வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
எந்த உடை போட்டாலும் நச்சுனு பொருத்தும் அளவிற்கு உடல் கட்டோடு இருக்கும் இவருக்கு தற்போது விட தமிழில் எக்கசக்க வாய்ப்புகள் வந்தாலும் பட தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களை ஈர்த்து... மனத்தில் துள்ளலை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் தான் இவை..