நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலித்து வருவதாக சர்ச்சை பரவி வரும் நிலையில், அதற்கு பலம் சேர்க்கும் வகையில் ஒரு ரொமாண்டிக் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா கடைசியாக 'குஷி' படத்தில் நடித்தார். உடல்நலக்குறைவால் சிறிது காலம் ஓய்வெடுத்தார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். சமீபத்தில் 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பை தொடங்கினார். தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். மேலும் சில படங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
24
இயக்குனருடன் நெருக்கம் காட்டும் சமந்தா
சமந்தா, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக பழகி வருவது அனைவரும் அறிந்ததே. இருவரும் டேட்டிங் செய்வதாகவும், காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இருவரும் இதுவரை இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், இவர்களின் உறவு குறித்த செய்திகள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. சமந்தாவே நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
34
காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
சமீபத்தில் இவர்களைப் பற்றிய செய்திகள் குறைந்திருந்த நிலையில், மீண்டும் சமந்தா நெருப்பை பற்ற வைத்துள்ளார். அண்மையில் மும்பையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 'தி ஆல்கெமிஸ்ட்' என்ற பிராண்ட் அறிமுக விழாவில் தமன்னா, ராஜ் நிடிமோரு ஆகியோருடன் சமந்தா கலந்துகொண்டார். அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளில், என் கெரியரில் சில தைரியமான முடிவுகளை எடுத்துள்ளேன். புத்திசாலித்தனமான, கடினமாக உழைக்கும் நபர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே” என்று குறிப்பிட்டு, சமந்தா இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படங்களில் ராஜ் நிடிமோருவை சமந்தா கட்டிப்பிடித்தபடி காணப்படுகிறார். இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன. இதன் மூலம் சமந்தா தங்கள் உறவு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் என்றும், விரைவில் நல்ல செய்தி வரலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'தி ஃபேமிலி மேன்' தொடர் மூலம் ராஜ் நிடிமோரு பிரபலமானார். அந்த தொடரில் சமந்தா நடித்தபோது தான் ராஜ் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.