சட்டை பட்டனை கழட்டி விட்டு... உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா எடுத்துக்கொண்ட சவால்..! வைரலாகும் புகைப்படம்!

First Published | Mar 7, 2021, 1:34 PM IST

நடிகை சமந்தா நாளை கொண்டாடப்படவுள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு, புதிய சவால் ஒன்றை எடுத்து கொள்வதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து கவர்ச்சி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

கல்யாணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு அக்கா, அண்ணி, அத்தை, அம்மா வேடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதை மாற்றியவர் சமந்தா. தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமந்தா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். கவர்ச்சிக்கும் எவ்வித தடையும் சொல்லாமல், தன்னுடைய நடிப்பு திறமைக்கு சவாலான கதாபாத்திரங்களை நடித்து வருகிறார்.
Tap to resize

ஆஹா ஓடிடி தளத்தில் பிரபலமான சாம் ஜாம் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. தற்போது பிரபல வெப் தொடரான பேமிலி மேன் 2-வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது என சமந்தாவின் கேரியர் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.
அதேபோல் கல்யாணத்திற்கு பிறகு நடிகைகளை படங்களில் நடிக்க வைத்தால் கவர்ச்சி காட்டமாட்டார்கள் என்ற தடையை உடைத்து வருகிறார். அதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான புகைப்படங்களை நாள்தோறும் பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது, கட்டற்ற கவர்ச்சியில் சமந்தா வெள்ளை நிற ஷர்ட் அணிந்து, பட்டனை கழட்டி விட்டு, உச்ச கட்ட கவர்ச்சியில், மகளிர் தினத்தை முன்னிட்டு புதிய சவால் ஒன்றையும் எடுத்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது. நம்முடைய மதிப்பை அறிந்து ஒருபோதும் அதற்கு குறைவான தகுதியுள்ளதை அனுமதிக்க கூடாது.
இந்த சர்வதேச மகளிர் தினத்தில் நான் எடுத்து கொள்ளும் சேலஞ் என்னவென்றால், என்னை நானே மேலும் கூடுதலாக நம்ப போகிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த ஒரு செயலும் மாற்றங்களும் உங்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என கேள்வியை எழுப்பி கவர்ச்சி உடையோடு பதிவு செய்துள்ளார்.

Latest Videos

click me!