சமந்தா படத்துக்கு இவ்ளோ மவுசா..! ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கான வசூலை வாரிக்குவித்த யசோதா

First Published | Nov 10, 2022, 1:20 PM IST

ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது.

பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபகாலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் யசோதா. இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ளார் சமந்தா. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்தில் சமந்தா உடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். சர்ச்சைக்குரிய வாடகைத் தாய் முறையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

இதையும் படியுங்கள்... சன்னி லியோன் - தர்ஷா குப்தா ஆடையை ஒப்பிட்டு பேசிய நடிகர் சதீஷுக்கு சவுக்கடி பதில் கொடுத்த இயக்குனர் நவீன்

Tap to resize

Samantha

நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இப்படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டு படத்தை அவர் புரமோட் செய்த விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் மிகவும் பதட்டமாக இருந்தாலும், மறுபுறம் உற்சாகமாகவும் இருக்கிறது என சமந்தா சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யசோதா திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 24 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 13 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை 3.5 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 2.5 கோடிக்கும், திரையரங்க உரிமை 12 கோடிக்கும் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பே இப்படம் ரூ.55 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா... பிரியாணி சமைத்து தடபுடலாக விருந்து வைத்த மம்முட்டி

Latest Videos

click me!