Godfather movie : அட்ராசக்க... ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கான் உடன் கூட்டணி - மாஸ் காட்டும் நயன்தாரா

Ganesh A   | Asianet News
Published : Mar 16, 2022, 10:07 AM IST

Godfather movie : அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்தி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துவரும் நயன்தாரா, அடுத்ததாக சல்மான் கானுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

PREV
15
Godfather movie : அட்ராசக்க... ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கான் உடன் கூட்டணி - மாஸ் காட்டும் நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார்

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது.

25

மலையாளத்தில் 2 படம்

இதேபோல் மலையாளத்தில் இவர் நடிப்பில் கோல்டு மற்றும் பாட்டு ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கோல்டு படத்தில் ப்ரித்விராஜுக்கு ஜோடியாகவும், பாட்டு படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார் நயன்தாரா. பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இந்த இரண்டு படங்களையும் இயக்குகிறார்.

35

பாலிவுட்டில் அறிமுகம்

இதுவரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நயன். இப்படத்தை நடிகை விஜய்யின் பேவரைட் இயக்குனரான அட்லீ இயக்குகிறார். நடிகை நயன்தாரா நடிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும்.

45

தெலுங்கில் காட்ஃபாதர்

இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்ஃபாதர் படத்திலும் நடித்து வருகிறார் நயன். இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

55

நயன்தாரா படத்தில் சல்மான் கான்

இந்நிலையில், காட்ஃபாதர் படத்தில் கெஸ்ட் ரோலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள சிரஞ்சீவி, சல்மான் கானுடன் இணைந்து நடிப்பது மிக்க மகிழ்ச்சி என்றும், அவர் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...  Etharkkum Thunindhavan :ரூ.100 கோடியை கடந்தது எதற்கும் துணிந்தவன் வசூல்... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூர்யா

Read more Photos on
click me!

Recommended Stories