Sai Pallavi: ராமாயணா செட்டில் சாய் பல்லவியை அழவைத்த அந்த ஒரு சம்பவம்! ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது?

Published : Nov 13, 2026, 01:53 PM IST

Sai Pallavi Emotional Moment From Ramayana Sets : ராமாயணா படத்தில் சீதையாக நடித்து வரும் சாய் பல்லவி, ஷூட்டிங்கில் நடந்த ஒரு உருக்கமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

PREV
14
ராமாயணா செட்டில் சாய் பல்லவி எமோஷனல் ஆனது ஏன்?

இந்தியத் திரையுலகில் தனது இயல்பான நடிப்பாலும், தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராமாயணா’ திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ளார். ராமாயணக் கதையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீதையின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருப்பது படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.

சீதையின் கதாபாத்திரம் என்பது ஒரு நடிகைக்குக் கிடைக்கும் சாதாரண வாய்ப்பு மட்டுமல்ல. பலருடைய மனதில் பக்தியும் மரியாதையும் நிறைந்த இடத்தைப் பெற்றிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் உயிர்ப்பிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து சாய் பல்லவியும் திறம்பட நடித்திருக்கிறார். இந்த நிலையில் ராமாயணா படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் சாய் பல்லவி.

24
சாய் பல்லவியின் காலில் விழுந்த மொழிப் பயிற்சியாளர்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி, ‘ராமாயணா’ படப்பிடிப்புத் தளத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஒரு காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அவருக்கு மொழிப் பயிற்சி அளித்து வந்த பயிற்சியாளர் திடீரென சாய் பல்லவியின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சாய் பல்லவி அதிர்ச்சியடைந்ததுடன், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டுள்ளார். அந்த நிமிடத்தில் ஏற்பட்ட உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும், மொழிப் பயிற்சியாளர் உணர்ச்சிவசப்பட்டு அழுவதற்கு முன்பே தனக்குக் கண்ணீர் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

34
கதாபாத்திரத்தைத் தாண்டிய பக்தியும் அன்பும்!

இந்தச் சம்பவம் சாய் பல்லவியை மிகவும் நெகிழச் செய்துள்ளது. ஒரு நடிகையாகத் தான் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கும், அந்தக் கதாபாத்திரத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் பக்திக்கும் இடையிலான வித்தியாசத்தை அந்தத் தருணத்தில் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீதையைப் பலரும் தங்களுடைய தாயாகவும், தினமும் வழிபடும் தெய்வீகப் பாத்திரமாகவும் பார்க்கின்றனர். அத்தகைய கதாபாத்திரத்தைத் திரையில் ஏற்று நடிக்கும் நடிகையைப் பார்க்கும்போது, அவர்களுக்குள் ஏற்படும் உணர்வு நடிப்பைப் பாராட்டுவதைத் தாண்டி இருக்கிறது என்பதை அந்த அனுபவம் தனக்குப் புரிய வைத்ததாக சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.

44
அமோக வரவேற்பை பெறும் ‘ராமாயணா’

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். மேலும், லட்சுமணனாக ரவி துபே, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, சீதையின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி எப்படித் தன்னைப் பொருத்திக்கொண்டு நடிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். தற்போது படமும் ரிலீஸ் ஆகி வெற்றிநடைபோட்டு வருவதுடம் பாக்ஸ் ஆபிஸிலும் 1000 கோடிக்கு மே வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories