Sai Pallavi Salary in Thalaivar 173 Movie : நடிகை சாய் பல்லவி கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. கஸ்தூரிமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தாம் தூம், தியா, மாரி 2, என் ஜி கே, கார்கி, அமரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த அமரன் படம் சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்திற்கு அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
23
சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி
இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர அடுத்ததாக உருவாக இருக்கும் ரஜினிகாந்த் படத்திலும் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர்173 படத்தில் சாய் பல்லவி நடிக்கிறாராம். முதலில் சுந்தர் சி இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் இந்தப் படத்திலிருந்து சுந்தர் சி அதிரடியாக வெளியேறினார். இந்த நிலையில் தான் இந்தப் படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
33
ரஜினிகாந்த் படத்தில் சாய் பல்லவி
இந்த படத்தில் சாய் பல்லவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே சாய் பல்லவி நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளை விட இது அதிகம் என்பது கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.