நான் உன் அப்பன் டா.... மீண்டும் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த எஸ்.ஏ.சி.... புதிய கட்சிக்கு பெயர் என்ன தெரியுமா?

Published : Jan 04, 2021, 10:50 AM IST

 எஸ்.ஏ.சியின் அரசியல் முயற்சியை விஜய் முறியடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வேலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.   

PREV
17
நான் உன் அப்பன் டா.... மீண்டும் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த எஸ்.ஏ.சி.... புதிய கட்சிக்கு பெயர் என்ன தெரியுமா?

​நடிகர் விஜய்க்கே தெரியாமல் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பிக்க முயன்றது கோலிவுட்டிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

27

உடனடியாக முந்திக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நான் தான் கட்சியை பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறேன். அதற்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார்.

37

ஆனால் விஜய் தரப்பில் இருந்து பரபரப்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும்,  அதில் தனது ரசிகர்கள் சேரக்கூடாது என்றும் கட்டளை விடுத்தார். அதுமட்டுமின்றி தனது பெயரையோ புகைப்படங்களையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அப்பாவுக்கே எச்சரிக்கை விடுத்தார் விஜய். 

47

இதை சிறிதும் எதிர்பார்க்காத எஸ்.ஏ.சி விஜய் ஒரு விஷ வலையில் சிக்கியுள்ளதாகவும், அந்த பிரச்சனைகளில் இருந்து விஜயை காப்பாற்றவே தான் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும்  குண்டை தூக்கி போட்டார். 
 
57

இந்த பிரச்சனைகள் தீவிரமாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் எஸ்.ஏ.சி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து அவருடைய மனைவி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவருடைய விஸ்வாசியும், அகிய இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவரான ராஜா கைது ஆகிய சம்பவங்கள் எஸ்.ஏ.சி.க்கு பின்னடைவை கொடுத்தது. இதையடுத்து விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டார். எஸ்.ஏ.சியின் அரசியல் முயற்சியை விஜய் முறியடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வேலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக இறங்கியுள்ளாராம். 
 
67

 விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள சந்திரசேகர், மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். அதன்படி 'அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்' என புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

77

அக்கட்சிக்கு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் பொங்கல் பண்டிகையன்று எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories