ஒரு காலத்தில் பாலிவுட் உருவாகும் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனைகளை படைத்த பல ஹாலிவுட் படங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை. ஷாருக்கானின், பதான், ஜவான் மற்றும் சில படங்கள் தவிர பெரிய நடிகர்களின் படங்கள் கூட வந்த சுவடே தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்றன.
மறுபுறம் தென்னிந்திய சினிமா அசுர வளர்ச்சியை கண்டு வருகிறது. RRR, கேஜிஎஃப் 1, 2, காந்தாரா, புஷ்பா, பொன்னியின் செல்வன், விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிரட்டி உள்ளன. எனவே அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ள தென்னிந்திய படங்கள் பாலிவுட்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரூ.2225 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் 6 தென்னிந்திய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
காந்தாரா A Legend அத்தியாயம் 1
2022-ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான காந்தாரா நாடு முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, ரூ 400 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் காந்தாரா படத்தின் ப்ரீகுவல் (முன்பகுதி) தற்போது உருவாகி வருகிறது. சமீபத்தில், காந்தாரா லெஜண்ட் அத்தியாயம் 1ன் முதல் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.தற்போது இதன் இரண்டாம் பாகம் 125 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது.
புஷ்பா: 2
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படம் நாடு முழுவதும் மிகப்பெரிய ஹிட்டானது. படத்தின் கதை முதல் வசனம் வரை மக்கள் மனதில் இடம் பிடித்தது. தவிர, படத்தின் அனைத்து பாடல்களும் பிளாக்பஸ்டர்கள் என்பதை நிரூபித்துள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அதன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகப் பெரிய அளவில் உருவாகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 60 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நிலையில், 2-ம் பாகம், 500 கோடி என்ற என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
கல்கி 2898 AD
பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 AD படம் இன்றுவரை அதிக பொருட்செலவில் இருக்கும் படமாக கூறப்படுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தின் டீசரும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சலார்
கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படம் சலார். பிரபாஸ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிருத்விராஜ் ,ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சலார் படம். 400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது. தம் ஹோம்பலே பிலிம்ஸ் மூலம் விஜய் கிரகந்தூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.. இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்,ஜே, சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், காளிதாஸ் ஜெயராம், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வரும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Kanguva
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படம் குறித்தும் பரபரப்பு நிலவுகிறது. 6 கதாப்பாத்திரங்களில் சூர்யா நடிக்கும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.. 350 கோடி செலவில் உருவாகி வரும் கங்குவா படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.