RRR படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்! இத்தனை கோடி கொடுத்து வாங்கியதா?

First Published Feb 17, 2021, 6:29 PM IST

எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழக உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
undefined
இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
undefined
இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
undefined
350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
undefined
தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த, அரசு அனுமதி கொடுத்துள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இந்த படம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
undefined
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
undefined
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், தமிழக ரிலீஸ் உரிமையை மட்டும் சுமார் 43 கோடிக்கு லைகா நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'பாகுபலி ' மற்றும் 'பாகுபலி 2 ' ஆகிய படங்கள் வசூலில் வாரி குவித்ததால்... இத்தனை கோடிக்கு 'RRR ' படம் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
undefined
click me!