பிக்பாஸ் வீட்டில் அலைமோதும் காதல் லீலைகள் - பாருவுக்கும் ஆளு கிடைச்சாச்சு!

Published : Oct 16, 2025, 04:00 PM IST

Romantic dramas stirring up in Bigg Boss: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்கி இரண்டு வாரமே ஆகும் நிலையில்... தற்போது காதல் அலைகள் முட்டி மோதி வருகிறது.

PREV
16
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ்:

விஜய் டிவியில் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, இந்த மாதம்... அதாவது அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய நிலையில், கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

26
5 நாளில் வெளியேறிய போட்டியாளர்:

முதல் நாளில் வாட்டர்மிலன் திவாகர், இயக்குனர் பிரவீன் காந்தி, சோசியல் மீடியா பிரபலம் அரோரா, துஷார், கனி, கம்ருதீன், பார்வதி, நந்தினி, கெமி, ரம்யா ஜோ, ஆதிரை, எப் ஜே, கானா வினோத், உள்ளிட்ட 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பிக்பாஸ் துவங்கிய 5 நாட்களிலேயே... பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் தாக்கு பிடிக்க முடியாது என, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் நந்தினி.

36
பிரவீன் காந்தியின் வெளியேற்றம்:

இவரை தொடர்ந்து, முதல் வாரத்தில்... மக்களின் வாக்குகள் அடிப்படையில் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ள போட்டியாளர்களின், அப்சாரா தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும்... இவரே அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாமினேஷன் படலம், தினசரி டாஸ்க், போன்றவற்றை தாண்டி சில போட்டியாளர்கள் காதல் கன்டென்ட் கொடுக்க துவங்கி உள்ளனர்.

விஜயின் ‘ஜனநாயகன்’ படக் கதை தெரியுமா..? லைன் பை லைன் உடைந்த ரகசியம்..!

46
களைகட்டும் காதல் கன்டென்ட்:

இந்த முறை, இளசுகள் பட்டாளம் அதிகம் என்பதால்... நெட்டிசன்கள் பலர் போட்டியாளர்கள் உள்ளே வந்தபோது காதல் கன்டென்ட் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட சீக்கிரம் இப்படி காதல் கன்டென்ட் கொடுப்பது தான் ஹை லைட்டாக பார்க்கப்படுகிறது.

56
ரொமான்டிக் கபிள்ஸ்:

அதாவது, முதல் வாரத்திலேயே துஷாருடன் சுற்றி திரிந்து வந்த பலூன் அக்கா அரோரா அவரை காதலிப்பதை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கன்பெஸ் பண்ண துவங்கி இருக்கிறார். இவரை தொடர்ந்து ஆதிரை, FJ -வை காதலிப்பதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும்... இவர்களின் ரொமென்ஸ் கொஞ்சம் அத்து மீறி சென்று கொண்டிருக்கிறது.

66
பாருவும் சிக்கிட்டாங்களா?

கடைசியாக இவரும் காதல் வலையில் சிக்கிட்டாரா? என சித்திக்க வைத்துள்ளது பாருவின் லவ் டிஸ்ட்ரெக்சன். அதாவது நேற்று அரோரா, துஷார், கம்ருதீன், மற்றும் பாரு ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, கம்ருதீன் மீது தனக்கு இன்ட்ரெஸ்ட் இருப்பதை கூறினார். கம்ருதீனும் அதற்க்கு சம்மதம் சொல்வது போல் சைகை காட்டியது தான் வேற லெவல். மொத்தத்தில்... இந்த முறை ஒன்று, இரண்டு அல்ல... மொத்தம் 3 ஜோடிகள் காதல் கன்டென்ட் கொடுக்க தயாராகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் பட மோசடி வழக்கு... லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் வைத்த செக்..!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories