Robo Shankar Top Cooku Dupe Cooku 2 Elimination : ரோபோ சங்கர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன போது விசில் அடிச்சுக்கிட்டே வெளியேறினார்.
காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மறைவு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் மோசமடைந்துள்ளது.
ஜாலியா சிரிச்சி அரட்டை அடித்துக் கொண்டு இருந்த ரோபோ சங்கர்
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும், மருத்துவர் அளித்த சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களும் செயலிழந்து கடைசியாக கோமா நிலைக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று இரவு 8.30 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த ரோபோ சங்கர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டாப் குக் டூப் குக் சீசன் 2 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் 3 வாரங்கள் சென்ற நிலையில் கடைசியாக எலிமினேட் என்று சொல்லப்படும் அந்த வாரத்தில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அப்போதும் கூட அவர் ஜாலியாக விசில் அடிச்சுக் கொண்டு, ஆட்டம் ஆடிக் கொண்டும் அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் சங்கரும் கடின முயற்சியின் மூலமாகவும் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு முன்னேறினார். கமல் ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், தனுஷின் மாரி, விஜய்யின் புலி, அஜித்தின் விஸ்வாசம் என்று பல படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு காமெடி ஷோவில் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 3ல் நடுவராக பங்கேற்றார். டைம் என்ன பாஸ், வேற மாரி ஆபிஸ் போன்ற வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர், ஸ்டாண்ட் அப் காமெடியன், டான்ஸர் மட்டுமின்றி அவர் ஒரு சிங்கரும் கூட. ஆம், கன்னி மாடம் படத்தில் இடம் பெற்ற மூணு கால் வாகனம் என்ற பாடலை பாடியுள்ளார்.
55
டாப் குக் டூப் குக்கு சமையல் செய்யும் ரோபோ சங்கர்
சமையல் கலையிலும் ஆர்வம் கொண்டுள்ளார். அஜித்தின் பேவரைட் பிரியாணியை கச்சிதமாக செய்து கொடுப்பாராம். அந்தளவிற்கு சமையலில் ஈடுபாடு கொண்டுள்ளார். ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அதிலிருந்து மீண்டு வந்தது போன்றும் தற்போதும் அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன், கமல் ஹாசன், சிம்பு, தாடி பாலாஜி என்று பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கரின் உடலுக்கு நாளை இறுதி அஞ்சலி செலுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.