பாதியிலேயே நின்ற 'ஹாப்பி எண்டிங்': ஆர்.ஜே. பாலாஜி எடுத்த அதிரடி முடிவு! என்ன ஆனது அந்த படம்?

Published : Dec 23, 2025, 03:48 PM IST

rj balaji happy ending movie dropped : நடிகர் ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் ஹாப்பி எண்டிங் படத்தை கைவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

PREV
14
Happy Ending Movie in Tamil

ஆர் ஜே பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை. பல விமர்சனங்களை பெற்றது. காமெடி நடிகர்களில் இருந்து ஹீரோவாக மாறி இருந்த ஆர்ஜே பாலாஜி இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். இவரது வாழ்க்கை முன்னேறி வருகிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

24
ஆர் ஜே பாலாஜி

தற்போது அவர் ஹேப்பி என்டிங் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தை பற்றிய எந்த தகவலும் வெளிவரவில்லை. இதைக்கண்ட நெட்டிசன்கள் படம் வரப்போகிறதா இல்லை அவ்வளவுதானா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி தன் காதல் பிரேக் அப் செய்ததைப் பற்றி முழு கதைக்களம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது

34
RJ Balaji Next Movie Update

இந்த படத்தை புதுமுக இயக்குனர் அம்மா முத்து சூர்யா இயக்குவதாக கூறப்படுகிறது.சீன் ரோல்டன் என்பவர் இசையமைப்பாளராக உள்ளார்.மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகியோர் தயாரிப்பாளராக இந்த படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படத்தை எதிர்நோக்கி இருந்த ரசிகர்கள் தற்போது இந்த படத்திற்கான அப்டேட் எதுவும் இல்லாத காரணத்தினால் இதனை விமர்சித்து வருகின்றனர்.

44
RJ பாலாஜி இயக்கும் படம்:

ஆர் ஜே பாலாஜி தற்போது இயக்குனராக இயக்கி வரும் படம் தான் கருப்பு . முதலில் இந்த படத்திற்கு ஹீரோவுக்கு தேடி அலைந்தார் ஆர் ஜே பாலாஜி அதன் பிறகு தான் சூர்யா வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கி வருகிறார். கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து ஆர் ஜி பாலாஜியும் ஹேப்பி என்டிங் படத்தை நடித்து வந்தார். கருப்பு படம் ரிலீஸ் ஆனது பிறகு ஹேப்பி என்டிங் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான எந்த ஒரு அப்டேட்டும் இன்னும் வெளிவரவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தன் படத்தை மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கிறாரா என்றும் ஹேப்பி என்டிங்படத்தை கைவிட்டு விட்டார் என்று ரசிகர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த படம் திரையரங்கிற்கு வருமா வராதா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனம் எழுந்துள்ளது. படம் ஹாப்பி என்டிங்காக முடியுமா இல்ல இதுதான் எண்டா என்றும் தெரியவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories