பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Nov 16, 2025, 02:05 PM IST

Red Card Eviction in Bigg Boss tamil 9: 'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியில் இந்த வாரம், கனி எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மற்றொரு போட்டியாளர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
15
பிக்பாஸ் எடுத்த முடிவு:

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி, 40 நாட்களை எட்டி விட்ட நிலையில், தற்போது வரை உள்ளே இருக்கும் பழைய போட்டியாளர்களும் சரி, தற்போது புதிதாக உள்ளே சென்ற வைல்டு கார்டு போட்டியாளர்களும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை புரிந்து கொண்டு சுவாரஸ்யமாக விளையாடவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இனி போட்டியாளர்களை மட்டும் நம்பி பலன் இல்லை என்கிற முடிவுக்கு வந்த பிக்பாஸ் தன்னுடைய குரல் மூலம், நானும் உங்களுடைய சேர்ந்து விளையாட போகிறேன் என கூறினார்.

25
இந்த வார டாஸ்க்:

இது பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே நடக்காத அரிய நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. மேலும் கடந்த வாரம், போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் திறமையை வெளியே கொண்டு வரும் விதமாக, ராஜா - ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அனைவரையும் ஆளும் மன்னர் பொறுப்பு, தண்ணீர் பழத்துக்கு, கானா குயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், மன்னர் ஆன பின்னரும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் குறைசொல்லி கொண்டு, சரியாக விளையாட்டில் கவனம் செலுத்தாமல் போனது இந்த டாஸ்கையே மோசமாகியது.

35
ரோஸ்ட் செய்த மக்கள் செல்வம்:

இதை தொடர்ந்து பார்வதி மற்றும் விக்ரம் இருவரும் ராஜா - ராணியாக மாற்றப்பட்டனர். அப்போதும் கலவரங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் மூண்டது. 6 வாரங்கள் வரை, போட்டியாளர்களுக்கு கிளி பிள்ளைக்கு சொல்வது போல்... பொறுமையாக எடுத்து கூறிய விஜய் சேதுபதி, இந்த முறை தீவிர ஆக்க்ஷனில் இறங்கியதாகவே தெரிகிறது. நேற்றைய தினம், கனி, சபரி, விக்ரம், பார்வதி, திவாகர் என அனைவரையும் பார்ப்பாசம் பார்க்காமல் ரோஸ்ட் செய்த மக்கள் செல்வன் இன்றைய தினம் ஒரு போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியுள்ளதாக கூறப்படுவது, ரசிகர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

45
ரெட் கார்டு கொடுக்கப்பட்டதா?

அதாவது, இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகி உள்ளார். இதனை ஈடுகட்ட வைல்டு மூலம் 4 போட்டியாளர்களும் உள்ளே உள்ளனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம், ஒரு போட்டியாளர் மட்டுமே மக்களின் வாக்குகளை வைத்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மற்றொரு போட்டியாளர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

55
சிக்கிய திவாகர்:

அதாவது இந்த வாரம், முதல் முறையாக போட்டியாளர்களால் எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்த, கனி தான் குறைந்த வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, கனி டைட்டில் வின்னராக வருவாரு என போட்டியாளர்கள் அனைவருமே எதிர்பார்த்த நிலையில், இவரது வெளியேற்றம் அவர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல், ஓட்டிங்கில் தப்பித்து சேப் ஆன திவாகருக்கு தான், ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை? என்ன காரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories