
பாண்டியன் மற்றும் கோமதி குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்தவர் தான் பழனிவேல். பாண்டியனுக்கு மூத்த பிள்ளை மாதிரி இருந்தவர் தான் பழனிவேல். என்னதான் தன்னுடைய வீட்டில் கோடி கோடியாக சொத்து இருந்தாலும் அங்கு உண்மையும், நியாயமும் இல்லை என்று கருதிய பழனிவேல் தனது அக்கா கோமதியுடனும், மாமா பாண்டியனுடனும் தான் வாழ்ந்து வந்தார்.
அதோடு பாண்டியனின் கடையில் ஒருவராக வேலை பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில் பழனிவேலுவிற்கும் சுகன்யாவிற்கும் திருமணம் நடக்க, பாண்டியனின் குடும்பத்தில் தனது கணவருக்கு நேர்ந்த அவமானங்களை எல்லாம் சுகன்யாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும், அடிக்கடி கள்ளாப்பெட்டியிலிருந்து பணமும் காணாமல் போக அதற்கு பழனிவேல் தான் காரணம் என்று பாண்டியன் அவரை கடிந்து கொண்டார்.
இந்த சூழலில் தான் சுகன்யா தனது கணவரின் அண்ணன்களிடம் சென்று தனது கணவருக்கு ஒரு கடை வைத்து கொடுத்தால் அவரும் பிழைத்துக் கொள்வார் என்று கேட்க, அவர்களும் ஓகே சொன்னார்கள். அதற்கு ஒரு கண்டிஷனும் போட்டார்கள். அதாவது, பாண்டியன் வீட்டிலிருந்து வெளியேறி இங்கு வந்து விட வேண்டும். இத்தனை நாட்களாக அதற்கு டிமிக்கி கொடுத்து வந்த பழனிவேலுவிற்கு அவரது ஆத்தா காந்திமதி புத்திமதி சொல்லவே சரி என்று ஒத்துக் கொண்டார்.
இதைப் பற்றி கோமதியிடமும், பாண்டியனிடமும் சொல்ல வேண்டும் என்று கூறவே எப்படி கூறுவது என்று திகைத்துக் கொண்டிருந்தார். ஆனால், வேறு வழியே இல்லாத சூழலில் காந்திமதி தனது மகளிடம், மருமகனிடமும் சொன்னார். அதாவது, செந்தில் அரசு வேலைக்கு சென்றுவிட்டான், கதிரும் டிராவல்ஸ் வைத்துவிட்டான், சரவணனும் கடையில் வேலை பார்க்கிறான். ஆனால், பழனிவேல் அப்படியே இருந்துவிட முடியாது அல்லவா. அவனை நம்பியும் ஒரு பெண் வந்துவிட்டாள். அப்படியிருக்கும் போது இன்னும் எத்தனை நாட்கள் தான் உங்களை நம்பி கடையில் வேலை பார்ப்பான் என்று வருத்தமாக சொல்லி கடைசியில் அவனுக்கு அவனது அண்ணன்கள் சொந்தமாக கடை வைத்துக் கொடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டார்கள்.
அதற்கு மட்டும் நீங்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது குறித்து பழனிவேலுவிடம் கோமதி கேட்க, இதைப் பற்றி என்னிடமே நீ சொல்லியிருக்கலாம். ஏன், அம்மாவை வைத்து சொல்ல வைத்தாய் என்று பழனிவேலுவிடம் கோமதி கோபித்துக் கொண்டார். கடைசியில் நீ கடை வைப்பது எங்களுக்கு சம்மதம் தான். அதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே, என்று ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து பாண்டியனும், நீ வேலையை நன்றாக கற்றுக் கொண்ட பிறகு உனக்கு நாங்களே ஏதாவது செய்து கொடுக்கணும் என்று நினைத்தோம். ஆனால், அதற்குள்ளாக உங்களது அண்ணன்களே கடை வைத்துக் கொடுக்கிறார்கள்.
நீ நல்லபடியாக முன்னுக்கு வந்தால் அதுவே போதும் என்று கூறினார். பழனிவேலுவைத் தொடர்ந்து சுகன்யாவும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். ஏனென்றால் பாண்டியனும், கோமதியும் தனது கணவர் சொந்தமாக கடை வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று சந்தோஷப்பட்டார். னால், என்ன கடை என்று இதுவரையில் யாரும் பேசவில்லை. அதில் சீரியல் இயக்குநர் கொஞ்சம் டுவிஸ்ட் வைத்திருக்கிறார். பழனிவேலுவின் அண்ணன்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். எப்படியாவது பழனிவேலுவை தங்களது பக்கம் இழுக்க வேண்டும் என்றும் பாண்டியனை பழி வாங்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளனர்.
அதற்கு முதல்படியாக இப்போது பழனிவேலுவிற்கு சொந்தமாக கடை வைக்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. இது எப்படியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்று பெரிய கடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இப்போது அதன்படியே விஜய் டிவி வெளியிட்ட புரோமோவிலும் நடந்துள்ளது. ஆம், பாண்டியனை பழி வாங்க, பழனிவேலுவை தங்களது பக்கம் இழுப்பதற்கு முத்துவேல் மற்றும் சக்திவேல் போட்ட திட்டம் நடக்கிறது. பாண்டியன் கடைக்கு எதிராகவே பழனிவேல் தனது அம்மா காந்திமதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை திறந்துள்ளார்.
இதை பார்த்த பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்கு வந்து கோமதியிடம் இதைப் பற்றி கூறி ஆத்திரமடைந்தார். அப்போது அங்கு பழனிவேல் வரவே, இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்துச்சு, இனிமேல் உனக்கும் இந்த குடும்பத்துக்கும் இருந்த உறவு முடிந்துவிட்டது. இனிமேல் இங்கு வரக் கூடாது என்று பாண்டியன் ஆதங்கமாக பேசினார். அதோடு அந்த புரோமோ முடிந்தது. தனது மகன் பழனிவேலுவிற்கு மருமகன் கடைக்கு எதிராக இப்படியொரு பிரம்மாண்டமான கடையை தொடங்கியது காந்திமதிக்கும் விருப்பம் இல்லை என்று தெரிகிறது.
ஆனால், சுகன்யாவிற்கு இது எல்லையில்லா மகிழ்ச்சி தான். ஏனென்றால் பாண்டியன் குடும்பத்தில் தனது கணவருக்கு நேர்ந்த அவமானம், அவரை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று புரிந்து கொண்ட சுகன்யாவிற்கு இப்போது அந்த குடும்பத்தை பழி வாங்கியது போன்று கணவருக்கு இப்படியொரு பிரம்மாண்டமான கடை திறக்கப்பட்டுள்ளது அல்லவா. அதனால், சந்தோஷமாகத்தான் இருப்பார். இனிமேல் தான் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இது மம்மூட்டி, முரளி நடித்த ஆனந்தம் படத்தின் காட்சிகள் போன்று தெரிகிறது.