Jana Nayagan Enters 200 Crores : நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 200 கோடி வசூலை வாரிக் குவித்ததோடு, ஒரு புது சாதனை படைத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே இணையத்தில் லீக் ஆகிவிட்டதால், இதற்கு தியேட்டரில் பெரியளவில் வரவேற்பு கிடைக்காது என்று ஹேட்டர்ஸ் கூறி வந்த நிலையில், அவர்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக, திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வருகிறது ஜனநாயகன். இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருந்தாலும், ஃபேமிலி ஆடியன்ஸ் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் வந்து என்ஜாய் பண்ணி வருகிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி இருக்கிறார். இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டாலும் அதில் தன்னுடைய ஸ்டைலில் கதைக்களத்தை மாற்றி, சுமார் 3 மணிநேரம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து படைத்திருக்கிறார் வினோத். இப்படத்தின் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் என்பதை இடம்பெற்றுள்ளதை பார்த்த ரசிகர்கள் பலரும் புல்லரித்துப் போய் உள்ளார்கள். அதுமட்டுமின்றி அந்த டைட்டில் கார்டு போடும் போது விஜய் சட்டமன்றத்தில் செய்த செய்கையும் இணைக்கப்பட்டு உள்ளதால், அது செம வைரலாகி வருகிறது.
விஜய் ரசிகர்களுக்கு தேவையான மாஸ் மொமண்ட்ஸ், ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக எமோஷன், சோசியல் மெசேஜ் என எல்லாம் கலந்த ஒரு பக்கா மீல்ஸ் ஆக ஜனநாயகன் படம் அமைந்துள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்ஸே, விஜய் - மமிதா பைஜு இடையேயான அப்பா - மகள் கெமிஸ்ட்ரி தான். அது சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஜனநாயகன் ரிலீஸ் ஆன ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயமாக இருந்தாலும், அதுவே அவரது கடைசி படம் என்பது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூல வேட்டை ஆடி வருகிறது. இப்படம் 4ம் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.37.17 கோடி வசூலித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ரூ.22.50 கோடியும், கர்நாடகாவில் ரூ.4.75 கோடியும், கேரளாவில் ரூ.2.85 கோடியும், ஆந்திரா தெலங்கானாவில் ரூ.2.05 கோடியும், இதர மாநிலங்களில் ரூ.5.02 கோடியும் வசூலித்திருக்கிறது. இதன்மூலம் ஜனநாயகன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.217.48 கோடி வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.145.98 கோடியும், வெளிநாடுகளில் ரூ.71.50 கோடியும் வசூலை வாரிக்குவித்துள்ளது.
55
விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் சாதனை
ஜனநாயகன் திரைப்படம் மூலம் நடிகர் விஜய், பாக்ஸ் ஆபிஸில் ஒரு புதிய மைல்கல்லை எட்டி உள்ளார். அது என்னவென்றால் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்களை கொடுத்த ஹீரோ என்கிற சாதனையை படைத்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல், பிகில், சர்க்கார், மாஸ்டர், பீஸ்ட், லியோ, வாரிசு, கோட் ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில், அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக ஜனநாயகன் திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த சாதனையை எந்த ஒரு தமிழ் ஹீரோவும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.