Rajinikanth Biopic: படமாகும் ரஜினியின் வாழ்க்கை.. 'சூப்பர் ஸ்டார்' கேரக்டரில் நடிக்கபோவது யார்?

Published : Jul 27, 2026, 07:23 AM IST

Rajinikanth Biopic: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதோடு, அதை ஒரு பயோபிக் படமாகவும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த ஒரு சின்ன க்ளூ, இந்த செய்தியை காட்டுத்தீயாக பரவச் செய்துள்ளது.

PREV
14
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பெங்களூரு பஸ் கண்டக்டர் முதல் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் வரை ரஜினியின் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது. 70-களின் தொடக்கத்தில், பெங்களூரு BMTC பஸ்ஸில் கண்டக்டராக இருந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அன்று அந்த பஸ்ஸில் பயணித்த யாருக்கும் தெரிந்திருக்காது, இவர் ஒருநாள் இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றுவார் என்று. அப்படி பெரும் வாழ்க்கைப் பாதையை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதும் ரஜினிகாந்த்

கடந்த 50 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் ஜாலம் காட்டி வரும் ரஜினிகாந்த், இப்போது தன் வாழ்க்கைக் கதையை எழுதத் தயாராகிவிட்டார். அவர் தனது சுயசரிதையை எழுதும் செய்தி, கோலிவுட் முதல் சாண்டல்வுட் வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கண்டக்டர் முதல் சென்னை சினிமா உலகின் சிகரம் தொட்டது வரையிலான அவரது பயணம் எளிதானதல்ல. ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சந்தித்த அவமானங்கள், தோல்விகள், வெற்றிகள், கடின உழைப்பு என அனைத்தையும் இந்தப் புத்தகம் பேசும்.

24
படமாகும் ரஜினியின் வாழ்க்கை

புத்தகம் எழுதுவதோடு நின்றுவிடாமல், அதை ஒரு பயோபிக் படமாக எடுக்கவும் ரஜினிகாந்த் தனது நெருங்கிய வட்டாரத்தில் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், 'அப்பா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலையும் ஆவணப்படுத்துகிறார். இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று கூறி இந்த செய்திக்கு வலு சேர்த்துள்ளார். தலைவரின் பயோபிக் உருவானால், அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

34
ரஜினி கேரக்டரில் நடிக்கப் போவது யார்?

ரஜினியின் வாழ்க்கை படமானால் அதில் சூப்பர் ஸ்டார் கேரக்டரில் நடிக்கப்போவது யார்? என்ற எதிபார்ப்பு இப்போது அனைவரிடமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் விவாதம் தொடங்கி விட்டனர். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி ஜாம்பவான்களுடன் நடித்துள்ள ரஜினி, தாதாசாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இன்றும் அவரது படம் ரிலீஸ் என்றால், தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூணும்.

44
புது படங்களில் பிஸியான ரஜினிகாந்த்

ஒருபக்கம் பயோபிக் பற்றிய பேச்சு இருந்தாலும், மறுபக்கம் அடுத்தடுத்த படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க ரஜினி தயாராகி வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அதோடு, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 'தர்மன்' படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனே தயாரிப்பது கூடுதல் சிறப்பு. மொத்தத்தில், ஒரு பஸ் கண்டக்டராக பயணத்தைத் தொடங்கி, இன்று உலக ஐகானாக மாறியுள்ள ரஜினிகாந்தின் 'ரியல் லைஃப்' கதையை திரையில் காண ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது. தலைவரின் ஸ்டைல், மேனரிசம், மனிதம் என அனைத்தையும் பேசும் அந்த உண்மைக் கதை திரைக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories