'விக்ரம்' படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்க என்ன காரணம் தெரியுமா?

First Published | Jun 2, 2022, 5:09 PM IST

கமல்ஹாசனின் ' மன்மதன் அம்பு ' படத்தில் ஒரு பாடலுக்காக சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikram movie

விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'விக்ரம்' இந்த ஆண்டு கோலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பெரிய திரைப்படங்களில் ஒன்றாகும். படத்தின் டிரெய்லர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா ' விக்ரம் ' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார் . அதோடு ட்ரைலர் சூர்யாவின் பகுதியைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கியது.

vikram movie

ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் 'விக்ரம்' படத்தில்  சூர்யாவின் காட்சியை இரண்டு நாட்கள் படமாக்கியுள்ளதாகவும், படத்தின் திரை இடத்தை சுமார் 10 நிமிடங்கள் சூர்யாபகிர்ந்து கொள்வார் பேசப்படுகிறது. மேலும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சூர்யாவின் சரியான நேரத்தில் உதவியதற்கு நன்றி தெரிவித்ததோடு, சூர்யா திரைப்படத் துறையில் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

Tap to resize

vikram movie

கமலின் ராஜ்கமல் தயாரித்துள்ள 'விக்ரம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் கேட்டபோது எந்தத் தயக்கமும் இன்றி உடனடியாக ஒப்புக்கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதோடு இந்த படத்தின் கிளைமேக்ஸில் தோன்றும் சூர்யா தான் அடுத்த பார்ட்டில் நாயகன் என்றும் சொல்லப்படுகிறது.

kamal vikram

கமல்ஹாசனும் சூர்யாவும் இணைவது முதல் முறையல்ல இருவரும் ஏற்கனவே ' மன்மதன் அம்பு ' படத்தில் தோன்றியுள்ளனர். கமல், மாதவன் நடித்த அந்த படத்தின் ஒரு பாடலுக்காக சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக  கமல்ஹாசனை தனது வழிகாட்டியாக கருதுவதாகவும், அவரது கோரிக்கையை ஒருபோதும் மறுக்கவில்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!