நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும், கோலிவுட்டில் உதயநிதியின் ஆட்டம் தொடங்கியது.
முதலில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி வெளியிட்டார் உதயநிதி, அதன்பின் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் உதயநிதி வசம் சென்றன. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமலின் விக்ரம் என இவர் வெளியிட்ட படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... Cobra movie : உதயநிதி வசம் சென்ற ‘கோப்ரா’... வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கியது ரெட் ஜெயண்ட்
இனி வரும் மாதங்களில் ரிலீசாக உள்ள மாதவனின் ராக்கெட்ரி, தனுஷின் திருச்சிற்றம்பலம், விக்ரமின் கோப்ரா, கார்த்தியின் சர்தார், ஆர்யாவின் கேப்டன் என ஏராளமான படங்களின் வெளியீட்டு உரிமையை ஏற்கனவே கைப்பற்றிவிட்டார் உதயநிதி. இவ்வாறு பெரிய நடிகர்களின் படங்கள் உதயநிதியை நாடுவதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணமும் இருக்கிறதாம்.
இதையும் படியுங்கள்... விருதுநகர் ஜெயிலில் குக் வித் கோமாளி புகழ்... அவர் திடீரென சிறை செல்ல காரணம் இதுதான்
அது என்னவென்றால் அவர் கொடுக்கும் ஷேர் தான். வழக்கமாக ஒரு படத்தை 60 - 40 என்கிற ஷேர் முறையில் தான் பெரும்பாலும் வெளியிடுவார்கள். ஆனால் உதயநிதியோ 70 - 30 என அதிகளவு ஷேர் கொடுக்கிறாராம். இதன் காரணமாகத் தான் பெரிய நடிகர்களின் படங்கள் அவரிடம் வரிசை கட்டி நிற்கின்றன.