தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அப்படத்தில் அமலா பாலின் தோழியாக நடித்திருந்தார். இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால் நடிகை ஐஸ்வர்யா மேனனை ரசிகர்கள் மத்தியில், மிகவும் பிரபலம் ஆக்கிய படம் என்றால் அது 'நான் சிரித்தால்' படம் தான். சுந்தர் சி தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். இப்படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். மேலும் ரசிகர்களை கவரும் விதமாக ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதில் கிக் ஏற்றும் கவர்ச்சியில், ரசிகர்கள் மனதை இம்சித்துள்ளார்... ஐஸ்வர்யா மேனன். மேலும் நாளுக்கு நாள் இவரின் அழகும் கூடி கொண்டே உள்ளது.